(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தனித்து பயணிக்க எவரும் விரும்பப்போவதில்லை. பஷில், கோத்தபாய, நாமல் என மூன்று ராஜபக் ஷவினரும் வெளியில் இருந்து துள்ளினாலும் மஹிந்த ராஜபக்ஷ துள்ள மாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.  

இம்முறை தேர்தலில் இனவாதிகள் எவருக்கும் கட்சியில் இடம் வழங்கப்படப்போவதில்லை.  இது தொடர்பில் கட்சி கூட்டத்தில் ஜனாதிபதி ஆணித்தனமாக முடிவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.