கொழும்பு பதுளை பிரதான புகையிரத பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110வது மைல் கட்டை பகுதியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை புரதான 60 அடி பாலத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பழுதடைந்த பயணிகள் பெட்டிகளை தண்டவாளத்திலிருந்து சீர்செய்து அனுப்பியுள்ளதாகவும், எனினும் பாலத்தை புனரமைப்பதற்கு இன்னும் 3 கிழமைகள் எடுக்கப்படும் என புகையிரத நிலைய ரயில் போக்குவரத்து புனரமைப்பிற்கான பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிரி தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இப்பாதையினை சீர் செய்வதற்கு ஊழியர்கள் இரவு பகல் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 3 கிழமைகளில் பாலம் சீர்செய்து வழமைக்கு கொண்டு வரப்படும். அத்தோடு இப்பாலம் பழமை வாய்ந்ததன் காரணமாக எதிர்காலத்தில் இப்பாலத்தை மாற்றுவதற்கு நினைத்துள்ளோம் என பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிரி மேலும் தெரிவித்தார்.