அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு 

Published By: Digital Desk 3

07 Jul, 2025 | 01:44 PM
image

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (06) 78 ஆக அதிகரித்துள்ளது. அதில் 28 சிறுவர்களும் அடங்குவர்.

டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு அதிகளவு ஏற்பட்ட மையப்பகுதியான ஹில் கன்ட்ரியில் உள்ள கெர் கவுண்டியில் 28 சிறுவர்கள் உட்பட  68 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸில் வேறு இடங்களில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு,  41 பேர் காணாமல் போயுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோடைக்கால முகாமில் இருந்து காணாமல் போன மாணவிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

"இது ஒரு பயங்கரமான சம்பவம், முற்றிலும் கொடூரமானது. எனவே, இவ்வளவு துன்பங்களை அனுபவித்த அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஆசீர்வதிப்பாராக, டெக்சாஸ் மாநிலத்தை கடவுள் ஆசீர்வதிப்பாராக" என அவர் நியூ ஜெர்சி மாநிலத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வெள்ளப் பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த  கேம்ப் மிஸ்டிக் கோடைக்கால பெண்கள் முகாம் ஆகும்.  அங்கு 10 கேம்ப் மிஸ்டிக் முகாம்வாசிகளும் ஒரு ஆலோசகரும் இன்னும் காணவில்லை என கெர் கவுண்டி ஷெரிப் லாரி லீதா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சுதந்திர தின விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை மத்திய டெக்சாஸ் பகுதியில் பெய்த மழையினால் அருகிலுள்ள குவாடலூப் நதி கரைகளை உடைத்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேசில் தலைநகரில் ஹெலிகொப்டர் விபத்து: 4...

2026-08-09 12:21:37
news-image

ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமெனி:...

2026-08-09 11:45:03
news-image

தாய்லாந்து பாடசாலைத் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின்...

2026-08-09 09:36:18
news-image

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் :...

2026-08-08 12:17:24
news-image

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த...

2026-08-08 09:25:39
news-image

வரியை அறவிட அமெரிக்க நீதிமன்றம் தடை...

2026-08-07 16:47:13
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல்...

2026-08-07 16:34:07
news-image

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு...

2026-08-07 15:25:25
news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த...

2026-08-07 14:23:12
news-image

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ;...

2026-08-07 13:34:43
news-image

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும்...

2026-08-07 10:41:01
news-image

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி...

2026-08-06 16:24:26