நமது சுகாதார சேவை புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கும் காலத்திலேயே நாம் இருக்கிறோம். பழைய உறுதிப்பாடுகள் புதிய சிக்கலான விடயங்களுக்கு வழி வகுக்கின்றன. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, மரபணு மருத்துவவியல் மற்றும் நாடுகளுக்கு இடையேயான மருத்துவ சேவை வழங்குதலை நோக்கிப் பயணிக்கும் போது ஒழுங்குபடுத்தல் அதனுடன் முன்னேற வேண்டும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (6) பிற்பகல் நடைபெற்ற இலங்கை மருத்துவ சபையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
'நமது சுகாதார சேவை புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கும் காலத்திலேயே நாம் இருக்கிறோம்.பழைய உறுதிப்பாடுகள் புதிய சிக்கலான விடயங்களுக்கு வழி வகுக்கின்றன. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு டிஜிட்டல்மயமாக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மரபணு மருத்துவவியல் மற்றும் நாடுகளுக்கு இடையேயான மருத்துவ சேவை வழங்குதலை நோக்கிப் பயணிக்கும்போது ஒழுங்குபடுத்தல் அதனுடன் முன்னேற வேண்டும். இலங்கை மருத்துவ சபை இந்த அழுத்தங்களைத் தாங்கி நிற்கவில்லை. உண்மையில் நாம் அதன் மத்தியிலேயே இருக்கிறோம்.
மருத்துவத் தொழிலை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்லாமல் இலங்கையில் சுகாதார சேவைகளை வழங்குவதன் நோக்குநிலையை வடிவமைப்பதிலும் சுகாதார அமைச்சு இலங்கை மருத்துவ சபையை ஒரு முக்கிய பங்காளி எனக் கருதுகிறது.
பல வருடங்களாக உரிமம் வழங்குதல் கல்வித் தரநிலைகள் தொழில்முறை மேம்பாடு பராமரித்தல் நெறிமுறை மேற்பார்வை மற்றும் சுகாதாரப் பணியாளர் திட்டமிடல் போன்ற விடயங்களில் நாம் ஒன்றாகப் பணியாற்றியுள்ளோம்.
இவை சிறிய பணிகள் அல்ல – நமது குடிமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையின் தரம் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது என்பதை இந்த விடயங்களே தீர்மானிக்கின்றன என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM