bestweb

சுங்கத்தில் பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிப்பு: நிறுவன பட்டியலை வெளிப்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் – புபுது ஜயகொட

Published By: Vishnu

07 Jul, 2025 | 02:20 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படும் நடவடிக்கை நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவே விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனால் குறித்த வியாபாரிகளின் நிறுவனங்களின் பெயர் பட்டியலை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

முன்னிலை சோசலிச கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சுங்கத்தில் இருந்து பரிசோதனை இல்லாமல் கடந்த ஜனவரி 19,20,21 ஆகிய தினங்களில் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாபதிபதியினால்  ஜனவரி 30 ஆம் திகதி குழுவொன்று அமைக்கப்பட்டது. குறித்த குழுவின் அறிக்கை  தற்போது சமூகமயமாக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறித்த  குழுவின் அறிக்கையின் உண்மையான நகழ் பிரதிகள் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களில் இருந்து உறுதிப்படுகிறது.

குறித்த அறிக்கையின் பிரகாரம் சுங்கத்தில் ஏற்பட்டிருந்த நெரிசல்  நிலைக்கு தீர்வுகாண 3பேர் கொண்ட குழுவொன்று  சுங்க பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு குறைந்த பட்சம் 2பேர் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த 309 கொள்கல்களையும் விடுவிப்பதற்கு ஒரு உறுப்பினர் மாத்திரம் இருந்து தனித்து  தீர்மானம் எடுத்திருக்கிறது. 

அந்த கொள்கல்களில் 301 கொள்கலன்கள் சிவப்பு நிற ஸ்டிகர் ஒட்டப்பட்ட, கட்டாயமாக ஸ்கேன் பரிசோதனை மற்றும் பெளதிக பரிசோதனை செய்யப்பட வேண்டிய கொள்கல்களாகும். அதில் 31 கொள்கலன்கள் ஸ்கேன் பரிசோதனை கூட இன்றியே விடுவிக்கப்பட்டுள்ளன. 114 கொள்கலன்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளபோதும் பெளதிக பரிசோதனை செய்யப்படவில்லை. ஏனைய 158 கொள்கல்களும் மஞ்சள் நிர ஸ்டிகர் ஒட்டப்பட்டவைகளாகும்.

அவை சட்த்தின் பிரகாரம் ஸ்கேன் பரிசோேனை செய்யப்பட்டு, அதன் பொருட்களின் மாதிரி பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவற்றில் 013 கொள்கலன்கள் ஸ்கேன் செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 55 கொள்கலன்கள் ஸ்கேன் செய்யப்பட்டபோதும் மாதிரி பரிசோதனை செய்யப்படவில்லை. இது பாரிய விடயமாகும்.  இந்த தீர்மானம் சுங்க கட்டளைச்சட்டம் மற்றும் சுங்கத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை மீறும் நடவடிக்கை என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு இதற்கு முன்பும் பரிசோதனைகள் இன்றி கொள்கலன்கள் வடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் பல் சந்தர்ப்பங்களில் 2218 கொள்கலன்கள் பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 999 சிவப்பு ஸ்டிகர் ஒட்டப்பட்ட கொள்கலன்கள் என்கதுடன் சஞ்சள் ஸ்டிகர் ஒட்டப்பட்ட  1218 கொள்கலன்கள் இருந்துள்ளதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தமுறை விடுவிக்கப்பட்டுள்ள 309 கொள்கலன்களின் உரித்துடைய இறக்குமதியாளர்கள் 65 பேருக்கும் இதற்கு முன்னரும் இந்த சலுகை  கிடைத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் அரசாங்கம் இந்த மோசடியின் பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்தி தப்பிக்கொள்வதுடன் எதிர்க்கட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகளுக்கு  மோசடி குற்றச்சாட்டு தெரிவிப்பதே இடம்பெறும். நீண்டகாலமாக இந்த மோசடி செயலை மேற்கொண்டுவரும் வியாபாரிகள் விடுதலையாகின்றனர். இந்த வியாபாரிகளை மறைத்து பாதுகாப்பதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் உத்தியோகபூர்வமற்ற இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாகவே தெரிகிறது. 

எனவே இந்த மோசடி வியாபாரிகளைை வெளிப்படுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதனால் குறித்த வியாபாரிகளின் நிறுவனங்களின் பெயர் பட்டியலை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என நாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுகின்றோம் என்றார்.

சுங்கத்தில் இருந்து  கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படும் நடவடிக்கை நீிண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவே விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த வியாபாரிகளை மறைத்து பாதுகாப்பதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் உத்தியோகபூர்வமற்ற இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாகவே தெரிகிறது. அதனால் குறித்த வியாபாரிகளின் நிறுவனங்களின் பெயர் பட்டியலை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32