(இராஜதுரை ஹஷான்)
சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் தனிப்பட்ட கூட்டங்களுக்கும் அல்லது வேறு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. சபாநாயகருக்குரிய சகல விதமான உத்தியோகபூர்வ கூட்டங்கள் மற்றும் இராஜதந்திர சந்திப்புக்கள் அனைத்தும் பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெறுகின்றன. சபாநாயகர் தற்போது வசிக்கும் இல்லத்துக்கான மாத வாடகை அவரது மாத சம்பளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது என பாராளுமன்றம் அறிவித்துள்ளது.
சபாநாயகரின் இல்லம் மற்றும் அவர் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் அவரது தனிப்பட்ட பணிகுழாமினருக்கு பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள பல செய்திகள் குறித்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் விசேட அவதானம் செலுத்தியுள்ளார்.
இதுவரை காலமும் வழங்கப்பட்ட வரையறையற்ற வகையிலான எரிபொருள் வசதிக்கு பதிலாக சபாநாயகரின் யோசனைக்கமைய சபாநாயகருக்கு வழங்கப்படும் எரிபொருள் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் எரிபொருளுக்கு சமமானதாக இருக்க வேண்டும் என்று 2025.05.02 ஆம் திகதியன்று சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற ஆலோசனை தெரிவுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.அதற்கமைய சபாநாயகருக்கு வழங்கப்படும் மாதாந்த எரிபொருள் 900 லீற்றராக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி செயலாளரால் 2021.01.21 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் சபாநாயகருக்கு இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் ( வாகன இலக்கம் சிஎன் 8753/சிபிஐ 5198) அவரால் பயன்படுத்தப்படுகின்றன.சபாநாயகரின் ஊடக பிரிவின் பாவனைக்காக ஒரு வாகனம் பயன்படுத்தப்படுகிறது.
சபாநாயகரின் தனிப்பட்ட பணிக்குழாமினராக 08 அதிகாரிகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில்,சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர், தொடர்பாடல் செயலாளர், ஊடகச் செயலாளர் மற்றும் பொதுமக்கள் தொடர்புநிலை அதிகாரி ஆகிய பதவிகளுக்குஅரச சுற்றறிக்கை மற்றும் ஏற்பாடுகளுக்கமைய உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் எரிபொருள் வசதிகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் பாராளுமன்றத்தில் வழங்கப்படும் உணவுக்காக பாராளுமன்றத்தின் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர்கள் ஆகியோரின் மாத சம்பளத்தில் இருந்து உணவுக்குரிய கட்டணம் அறவிடப்படுகிறது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் தனிப்பட்ட கூட்டங்களுக்கும் அல்லது வேறு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை.சபாநாயகருக்குரிய சகலவிதமான உத்தியோகபூர்வ கூட்டங்கள் மற்றும் இராஜதந்திர சந்திப்புக்கள் பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெறுகின்றன.
அதேபோல் சபாநாயகர் தற்போது தற்காலிகமாக கொழும்பு 04. லோரிஸ் ஒழுங்கையில் வசிக்கும் இல்லத்துக்கான மாத வாடகை 2007.04.20 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் அவரது மாத சம்பளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM