(நெவில் அன்தனி)
கொட்டாஞ்சேனை செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் ஐ லீக் கால்பந்தாட்டத்தில் தீர்மானம் மிக்க போட்டி ஒன்றில் உபாதையீடு நேரத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் ஜாவே லேன் கழகம் மூன்றாவது அணியாக அரை இறுதிக்கு முன்னேறியது.
இதேவேளை, ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்ட சோண்டர்ஸ் கழகத்திடம் நியூ ஸ்டார் தோல்வி அடைந்ததால் அதிர்ஷ்டவசமாக மாளிகாவத்தை யூத் கழகம் கடைசி அணியாக அரை இறுதிக்கு முன்னேறியது.
எட்டு பிரபல கழகங்கள் பங்குபற்றிய ஐ லீக் கால்பந்தாட்டத்தின் முதல் சுற்று லீக் போட்டிகள் யாவும் இன்றுடன் நிறைவுபெற்றன.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற தீர்மானம் மிக்க இரண்டாவது குழுவுக்கான போட்டியில் ரெட் ஸ்டார் அணியை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதன் மூலம் ஜாவா லேன் கழகம் அரை இறுதிக்கு முன்னேறியது;
வெற்றிபெற்றால்தான் அரை இறுதிக்குள் நுழையலாம் என்பதை அறிந்திருந்த ஜாவா லேன் கழகம் வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சித்தது.
மறுபக்கத்தில் தனது முதல் இரண்டு போட்டியில் வெற்றிபெற்றிருந்த ரெட் ஸ்டார் கழகம் அரை இறுதிக்குச் செல்ல வெற்றிதோல்வியற்ற முடிவே தேவைப்பட்டது.
ஆட்டம் முழுநேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் கோல்கள் போட்டிருக்கவில்லை. இதனையிட்டு ரெட் ஸ்டார் மகிழ்ச்சியில் மிதந்தது.
ஆனால், உபாதையீடு நேரத்தில் தனது பின்கள வீரர்களையும் முன்களத்தில் ஈடுபடுத்திய ஜாவா லேன் கழகம் உடனடியாக பலனைப் பெற்றது.
உபாதையீடு நேரத்தில் (90 + 4 நி.) ரெட் ஸ்டார் கோல்காப்பாளர் பந்தை முறையாகத் தடுக்க தவறியபோது முன்னோக்கி வந்த பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த ஜாவா லேன் பின்கள வீரர் எம். அஸாத் வெற்றி கோலைப் போட்டு தனது அணியை அரை இறுதிக்குள் பிரவேசிகச் செய்தார்.
நியூ ஸ்டார் தோல்வி அடைந்ததால் மாளி. யூத் அரை இறுதிக்குள் நுழைந்தது
முதலாவது குழுவில் சோண்டர்ஸ் கழகத்துடனான போட்டியில் நியூ ஸ்டார் கழகம் தோல்வி அடைந்ததால் மாளிகாவத்தை யூத் கழகம் கடைசி அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது.
நியூ ஸ்டார் கழகம் அரை இறுதிக்குச் செல்வதற்கு வெற்றியே தேவைப்பட்டது.
ஆரம்பத்தில் முழு வீச்சில் விளையாடிய நியூ ஸ்டார் கழகம் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்தது.
ஆனால் 13ஆவது நிமிடத்தில் நிரேஷ் சுந்தரராஜ் வலதுபுறத்தில் இருந்து பரிமாறிய பந்தை பெத்தும் கிம்ஹான் கோலினுள் புகுத்த முயற்சித்தார். வெளியே செல்லவிருந்த பந்து நியூ ஸ்டார் கழகத்தின் பின்கள வீரர் ரி. அஸ்லாமின் பாதத்தில் பட்டு அவரது கோலினுள் புகுந்தது. இதனால் சோண்டார்ஸ் கழகத்துக்கு இனாம் கோல் ஒன்று கிடைத்தது.
எவ்வாறாயினும் 6 நிமிடங்கள் கழித்து கோல் நிலையை எம். ஷக்கீர் சமன்செய்தார்.
இடைவேளையின்போது இரண்டு கழகங்களும் தலா ஒரு கோலை போட்டிருந்தன.
எனினும் இடைவேளையின் பின்னர் ஆதிக்கம் செலுத்திய சோண்டர்ஸ் கழகம் மேலும் 3 கோல்களைப் போட்டு வெற்றியீட்ட நியூ ஸ்டார் கழகத்தின் அரை இறுதி கனவு கலைந்துபோனது.
ஆனால், இடைவேளைக்குப் பின்னர் ஆதிக்கம் செலுத்திய சோண்டர்ஸ் கழகம் 4 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
சோண்டர்ஸ் கழகத்தின் மேலும் 3 கோல்களை நிரேஷ் சுந்தரராஜ் (55 நி. பெனல்டி), பெத்தும் கிம்ஹான் (63 நி., 67 நி.) ஆகியோர் போட்டனர்.
அரை இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் கொட்டாஞ்சேனை செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஐ. அன்தனி மணிவண்ணன் ஐ லீக் கால்பந்தாட்ட சுற்றப் போட்டியை ஏற்பாடு செய்து நடத்திவருகிறார்.
அவரது தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினர் இப் போட்டியை மிகத் திறமையாக நடத்திவருகின்றனர்.
இப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு மொத்தம் 9 இலட்சம் ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு மொத்தம் 7 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக கிடைக்கும்.
அரை இறுதியுடன் வெளியேறும் இரண்டு அணிகளுக்கு தலா 4 இலட்சம் ரூபாவும் முதல் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்கு போட்டி கட்டணமாக 3 இலட்சம் ரூபாவும் வழங்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM