bestweb

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல அது ஒரு சமூகத் தேவைப்பாடு - பிரதமர் 

Published By: Vishnu

06 Jul, 2025 | 09:31 PM
image

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல. அது ஒரு சமூகத் தேவைப்பாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சிறந்த நிர்வாகமும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் அத்தகைய சமூகத் தேவைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (5) பிற்பகல் நடைபெற்ற இலங்கை மருத்துவ சபையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். நூற்றாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து ஒரு உத்தியோகபூர்வ நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்;

இது மக்களுக்கும் மருத்துவத் துறைக்கும் நமது நாட்டுக்கும் 100 வருட சேவை நிறைவைக் கொண்டாடும் சந்தர்ப்பம் மட்டுமல்ல.

மருத்துவவியலில் நாம் உயிர்களுடன் பணியாற்றுவதால் இந்த பொறுப்பு மிகவும் தீர்க்கமானது.கடுமையான சவால்களுக்கு மத்தியிலும் கோவிட் பெருந்தொற்றின் போது மருத்துவ சேவை வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு இலங்கை சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது.

நமது மருத்துவக் கல்வியின் மூலம் மேலும் மனிதாபிமானமுள்ள உணர்வுபூர்வமான நெறிமுறை சார்ந்த முழுமையான மருத்துவர்களை உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றிக் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 

அத்துடன் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை அடைந்ததற்காக இலங்கை மருத்துவ சபைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல.அது ஒரு சமூகத் தேவைப்பாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிறந்த நிர்வாகமும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் அத்தகைய சமூகத் தேவைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவசியம்.  இன்றுபோல் எதிர்காலத்திலும் உங்களுடன் இணைந்திருப்பதில் அரசாங்கம் பெருமை கொள்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32