bestweb

நடைமுறையில் உள்ள ஊழல் ஒழிப்பு சட்டம் முன்னேற்றகரமானது; இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்   

Published By: Vishnu

06 Jul, 2025 | 08:47 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

2023 ஆண்டு 9 இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் என்பது இலங்கையில் ஊழல் ஒழிப்பு தொடர்பில் உள்ள முன்னேற்றகரமான சட்ட மூலமாகும் எனவும் சர்வதேச சட்ட மூலத்தில் உள்ள  விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்பணிப்பாளர் நாயகமுமான ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை மன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அமைச்சரவையானது மோசடி நோக்குடன் தீர்மானம் எடுத்து இருக்குமானால் அது சட்டவிரோதமானது.முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு

எதிராக வழக்கு ஒன்றுள்ளது. மற்றொருவருக்கு எதிராக உர மோசடி தொடர்பிலும் வழக்கு உள்ளது. இவை அனைத்துக்கும் அமைச்சரவை பத்திரம் உள்ளது.தனிப்பட்ட வகையில் இவை அனைத்தையும் செய்யவில்லை என்பதற்கு அமைய இந்த குற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இது தொடர்பில் எவ்வாறு செயற்படும் என அரச அதிகாரிகளிடத்தில் குழப்பம் ஏற்படலாம். அரச அதிகாரிகள் நேர்மையாக செய்யும் எந்த ஒரு விடயமும் இதில் உள்ளடங்காது.இது அமைச்சர் ஒருவர் கூறினதாலேயே அதனை செய்தேன் என ஒருவர் கூறினால் இந்த தவறுக்கு அவர்கள் பொறுப்பு கூற வேண்டிய தேவை கிடையாது.வாய்மொழி மூலமாகவே பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதிகாரி ஒருவர் நேர்மையாக செய்யும் எந்த ஒரு விடயத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டிய தேவை இல்லை.  

மேலும் 2023 ஆண்டும் 9 இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் என்பது இலங்கையில் ஊழல் ஒழிப்பு தொடர்பில் உள்ள முன்னேற்றகரமான சட்ட மூலமாகும். இந்த சட்ட மூலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோர் மற்றும் வேறு பல குற்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவர்களை விசாரணைக்கு உட்படுத்த படுத்துல்,  வழக்கு தாக்கல் செய்தல் தண்டனை வழங்குதல் மாத்திரம் உள்ளடக்கியது. இந்த சட்டமூலத்தில் சர்வதேச சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தடுப்பு முறை கல்வி சுகாதாரம் நிறுவன வலுவூட்டல் நடவடிக்கை  முன்னெடுக்கப்படும் முறை என 4 பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32