பெருந்தோட்டத் துறைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தற்காலிக தொழில் முறைமையை நிறுத்தும் வகையில் ஒரு தெளிவான கொள்கை உருவாக்கப்படும் என தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்ணான்டோ தொழிலாளர் செங்கொடிச் சங்கத்திடம் உறுதி அளித்துள்ளார்.
தொழிலாளர் செங்கொடிச் சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி தலைமையில் கண்டியிலுள்ள தொழிலாளர் செங்கொடிச்சங்க அங்கத்தவர்கள் குழு ஒன்று தொழில் அமைச்சரை வெள்ளிக்கிழமை (04) நேரில் சந்தித்தது.
அதன் போது தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அதன்படி பின்வரும் விடயங்கள் தொடர்பாக அமைச்சர் உறுதி அளித்ததாக தொழிலாளர் செங்கொடிச்சங்கம் தெரிவித்தது.
பெருந்தோட்ட துறை தற்போது ஒரு தற்காலிக துறையாக படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது. அத்துடன் இந் நிலமையுடன் தொழிலாளர்களின் உடல் நல, பாதுகாப்பு சூழ்நிலைகள் கவனிக்கப்படுவதில்லை.
குறிப்பாக முறையான கழிப்பறைகள் மற்றும் உணவு உண்பதற்கான வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவு இன்மை என்பன தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் இன்றைய சூழ் நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் பேசப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேற் கூறப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப் பட்டதோடு தற்காலிக வேலை முறைமை உருவாக்கும் நடைமுறை தொடர்பான பல பிரச்சினைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டத்கவும்தெரிவித்தனர்.
இந்த பிரச்சினைகள் குறித்து மேலும் கூடிய அக்கறை செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான விரிவான ஒரு கொள்கை உருவாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM