நானுஓயாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனின் சாரதி மீது குளவி கொட்டு

06 Jul, 2025 | 05:10 PM
image

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை (06) இந்திய நாட்டினரை ஏற்றிச் சென்ற வேனின் சாரதி மீது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு நான்கு இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற போது, நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சுற்றுலா பயணிகளில் ஒரு குழுவினர் வேனில் இருந்து இறங்கி  புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது, வீதியோரத்தில் அருகில் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து சுற்றுலா பயணிகளை துரத்தியபோது அவர்களைப் பாதுகாப்பாக வேனில் ஏற்றிய சாரதி இறுதியில் சாரதி இருக்கையில் ஏறும் போது குளவி கொட்டுக்கு இலக்கானதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல் கிடைத்த உடனே  நானுஓயா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர் பின்னர்  குளவித் தாக்குதலுக்கு உள்ளான சாரதி  தனது உடல்நிலை மோசமாக இல்லை என்றும், சிகிச்சைக்காக நுவரெலியாவுக்குச் செல்வதாகவும் கூறியதை அடுத்து, நானுஓயா பொலிஸார் சுற்றுலா பயணிகளை அதே வேனில் நுவரெலியா வரை பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் ஏற்றுமதியில் 5 பில்லியன் டொலர்...

2026-07-17 05:02:55
news-image

இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத்...

2026-07-17 05:00:34
news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22