வவுனியா வடக்கின் தமிழர்களின் எல்லைக்கிராமங்களின் ஒன்றான திரிவைச்சகுளம் மற்றும் அதற்கு கீழான 600ஏக்கருக்கும் மேலான வயல்காணிகள் சிங்கள மக்களினால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எந்த ஒருவகையான காணி ஆவணங்களும் இல்லாமல் குறித்த காணிகள் எல்லையோர சிங்கள மக்களினால் சத்தமில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த ஆக்கிரமிப்பு மிக வேகமாக வெடிவைத்தகல்லு சந்தி வரை நகர்ந்து வந்துகொண்டிருக்கின்றது.
மேற்படி ஆக்கிரமிப்பு பகுதியினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சன்சுதன் மற்றும் உறுப்பினர்களான தமிழ்ச்செல்வன் பிரதீபன் வவுனியா மாநகர சபை உறுப்பினர் காணி உரிமையாளர்கள் ஆகியோருடன்சென்று பார்வையிட்டுள்ளார்
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
2009ம் ஆண்டின் பின்னர் மிகவேகமாக வெடிவைத்த கல்லு கிராமம் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றது.
இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நீண்டகாலம் இங்கு வசிக்கவில்லை. இதனை சாட்டாக வைத்துக்கொண்டு 2009 இல் ஆயுதப்போராட்டம் மௌனித்த பிறகு திட்டமிட்டு இந்த வெடிவைத்த கல்லு கிராமத்தின் ஒரு கிராமமான கொக்கச்சா குளம் சிங்களப்பெயர் மாற்றப்பட்டு அங்கு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. அங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்களை குடியேற்றியுள்ளனர்.
வெடிவைத்த கல்லின் இன்னுமொரு கிராமம் இந்ததிரிவைச்ச குளம்.இந்த கிராமத்திற்கு அண்மித்ததாக உள்ள கிராமங்கள்தான் கூலான்குளம் ஊற்றுக்குளம் அதனை தாண்டி இங்கு வந்து பார்த்தபோது மரங்கள் அகற்றப்பட்டு வெளியாக காணப்படுகின்றதுஇ மிகவேகமாக புல்டோசர் மூலம் பெரிய மரங்கள் வீழ்த்தப்பட்டு இன்று முற்றுமுழுதாக இந்த ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது.
ஏற்கனவே பல நூற்றுக்கணக்கான காணிகள் - வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனஇஇவை தமிழர்களின் காணிகள்
தமிழ் மக்களின் சுமார் ஆயீரம் ஏக்கர் காணிகளை சிங்கள மக்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
அரச இயந்திரத்தின் முழுமையான பங்களிப்புடன் அதன் ஆதரவுடன் இந்த ஆக்கிரமிப்பு இடம்பெற்றுவருகின்றது.
தமிழர்கள் தங்களின் காணிகளில் தடியை வெட்டினால் கூட வன இலாகதிணைக்களம் அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் முற்படுத்துதுகின்றது ஆனால் இங்கு பெரிய மரங்கள் வீழ்த்தப்பட்டபோதிலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
இந்த இடத்தை பார்க்கின்றபோது பெரும் கவலையேற்படுகின்றது எங்களின் பழம் கிராமமாக உள்ள வெடிவைத்த கல்லின் திரிவைச்ச குளம் முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கப்பட்டு வேகமாக கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த காணியின் உரிமையாளர்கள் இந்த காணியை துப்புரவு செய்வதற்காக 2020ம் ஆண்டு வந்தபோது இருவர் இந்த காணிக்கு சொந்தமாக இருக்கின்றனர்( மோகனதாஸ் மற்றும் கேதீஸ்வரன்) அவர்கள் தங்கள் தந்தையின் காணியை வெளியாக்குகின்ற போது வனவிலாக திணைக்களம் இவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திகுற்றவாளியாக்குவதற்கான வழக்கு நடைபெற்றது.
மூன்று வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வவுனியா மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் அவர்கள் நிரபராதிகள் என தெரிவிக்கப்பட்டது அவர்கள் தங்கள் காணிகளை வெளியாக்கியதற்கும்
வனஇலாகா திணைக்களம் இது ஒதுக்கப்பட்ட காணி என்று தெரிவித்தே அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது
ஆனால் இது ஒதுக்கப்பட்ட காணி என்பதற்கான ஆதாரங்களை ஆவணங்களை அவர்கள் எந்த இடத்திலும் சமர்ப்பிக்காததால் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபர்களும் நீதிபதிகள் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட உடனேயே இந்த காணிகள் சிங்களமக்களால் வெளியாக்கப்பட்டு வயல்நிலங்களாக்கப்பட்டுள்ளது.வயல்நிலங்களாக பயிர்விதைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
அங்கே கொட்டில்கள் போடப்பட்டு அவர்கள் காவல் இருக்கின்றனர் அதனுடன் இணைந்த இந்த பகுதிகள் இரண்டு மூன்று நாட்களாக டோசர் மூலம் வெளியாக்கப்பட்டுள்ளன.
நாங்கள் இந்த இடத்திற்கு நடந்து வந்தபோது சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற அரசியல் சார்ந்த செயற்பாட்டாளர்கள் சிலரை கண்டோம் அவர்கள் கத்தி கோடரி போன்றவற்றுடன் இந்த பகுதியிலிருந்து மதியமளவில் தங்கள் பகுதிக்கு செல்வதை காணக்கூடியதாகயிருந்தது.
அரச இயந்திரத்தின் ஆசீர்வாதத்துடன் வன இலாகா திணைக்களத்தின் ஆசீர்வாதத்துடன் மிகவேகமாக இந்த இடம் வெளியாக்கப்படுகின்றது மிகப்பெரிய மரங்கள் விழுந்து கிடக்கின்றன.
இதற்கு என்ன நீதி என்பதுதான் கேள்வி? சம்பந்தப்பட்டவர்கள் இதில் தலையிடவேண்டும் இது தமிழர்களின் பூர்வீகநிலம்.
நாங்கள் வேறு எவரின் நிலத்தையும் கேட்கவில்லை எங்கள் நிலத்தில் எங்கள் மக்களை வாழவிடவேண்டும்.
எங்கள் நிலங்கள்எங்களிற்கு வழங்கப்படவேண்டும் எங்கள் நிலங்களை நாங்கள் வெளியாக்குகின்ற போது சட்டங்களை ஏவி எமது மக்களை அச்சுறுத்துகின்ற இந்த அரசஇயந்திரம் வன இலாகா திணைக்களம் சிங்கள மக்கள் இந்த காணிகளை அடாத்தாக பிடித்து வெளியாக்குகின்ற போது கண்டும் காணாமலும் இருக்கின்றார்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM