bestweb

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு 

Published By: Digital Desk 3

07 Jul, 2025 | 09:19 AM
image

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் தென் மத்திய டெக்சாஸ் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. அதனுடன் பலத்த காற்றுடன் கூடிய புயலும் வீசி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டுள்ளனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து ஹெலிகொப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் சிக்கி நிற்பவர்கள், முகாம்களில் பரிதவித்து நிற்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 51 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 15 பேர் சிறுவர்கள் என தெரிய வந்துள்ளது. கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி ஓயாது என டெக்சாஸ் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை துறையின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார். இதுவரை 850 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,

நானும் மெலனியாவும், இந்த பயங்கர பாதிப்பில் சிக்கிய குடும்பத்தினர் அனைவருக்காகவும் வேண்டி கொள்கிறோம் என அவருடைய சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளார்.

எனினும், கனமழை மற்றும் வெள்ளம் நீடிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஜேசன் ருன்யென் தெரிவித்துள்ளார்.  20-க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் அவசரகால பொறுப்பு படையினர், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில்...

2025-07-13 18:36:15
news-image

கராச்சிக்கு செல்லவிருந்த பயணியை ஜெட்டாவுக்கு அழைத்துச்...

2025-07-13 12:40:28
news-image

அகமதாபாத்தில் எயார் இந்தியா பேரழிவில் சிக்கியது...

2025-07-13 11:19:30
news-image

மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளின் தாக்குதலில் பாலஸ்தீனிய அமெரிக்கர்...

2025-07-13 11:05:24
news-image

யேமனில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது குண்டு...

2025-07-13 10:02:44
news-image

மியன்மாரில் பௌத்த மடாலயம் மீது குண்டு...

2025-07-12 10:34:23
news-image

விமானம் புறப்படுவதற்கு முன்னர் இயந்திரங்களுக்கான எரிபொருள்...

2025-07-12 07:16:38
news-image

குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின்...

2025-07-11 12:35:30
news-image

காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள்...

2025-07-11 10:13:28
news-image

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா...

2025-07-10 11:35:24
news-image

செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி...

2025-07-10 09:31:21
news-image

இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியதில்...

2025-07-09 15:47:59