bestweb

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் வனவளத்திணைக்கள அதிகாரிகள் அத்துமீறி செயற்பட்டு வருவதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் தெரிவிப்பு

06 Jul, 2025 | 01:38 PM
image

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட தேக்கஞ்சேனை கிராமத்திற்குச் சென்ற வனவளத் திணைக்கள அதிகாரிகள்  சிலர் அங்கு இருக்கும் மக்களை மிரட்டி உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என அச்சுறுத்துகின்றனர். மேற்படி கிராம மக்கள் சுமார் எழுவது வருடங்களுக்கு மேலாக இந்தப் பகுதியில் தாங்கள் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் தெரிவித்தார்.

குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்திருந்த அவர் அம்மக்களுடன் உரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

ஆனாலும் தங்களை எந்த அரச அதிகாரிகளும் வந்து பார்ப்பதும் இல்லை என்று முறையிடுகின்றனர்.தங்களது பதிவுகள் பால்ச்சேனை மற்றும் கதிரவெளி ஆகிய இடங்களில் பதியப்பட்டுள்ளதாகவும் அதனால் தங்களால் இவர்களை அங்கு சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.

அவ்வப்போது சில வேளைகளில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் இங்கு வந்து தங்களை இங்கு இருக்க கூடாது இது வனவளத் திணைக்களத்திற்கு உரிய இடம் என அச்சுறுத்தி வருகின்றனர் எனதெரிவித்ததோடு தாங்கள் தேன் எடுப்பதற்கு காடுகளுக்கு செல்லும் வேளைகளில் காடுகளுக்குள் இருக்கும் விசேட அதிரடிப் படையினர் தங்களைத் தாக்கி இந்தப் பரதேசங்களுக்கு வரக்கூடாதென எச்சரித்து அனுப்புவதனால் தமது வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

தங்களுக்கான தொழிலாக மீன்பிடி மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாக மழைக் காலங்களில் கச்சான் மரவள்ளி போன்ற பயிர்களை பயிரிடுவதாகவும் மற்றும் காடுகளைில் கிடைக்கும் பழங்களை பறித்து விற்றுப் பிளைப்பை நடத்துவதாகவும்.சரியான பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் தாங்கள வாழ்ந்து வருவதாகவும் கூறினர்.

தங்களுக்கு எவ்வித அடிப்படைத் தேவைகளையும் எந்த அரசாங்கமும் செய்து தரவில்லை எனவும் சென்ற டிசம்பறில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் தங்கள் கிராமம் நீரினால் சூழப்பட்டதாகவும் ACT என்ற நிறுவணத்தினர்தான் படகு மூலம் வந்து தங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கியதாகவும் தெரிவித்தனர்.

தங்கள் கிராமத்தில் 55 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இதே போல் தமது கிராமத்திற்கு அன்மையாக நாவற்குளம் கல்லடி சம்பக்கலப்பை போனற பல கிராமங்களில் 100 குடும்பங்கள் அளவில் வசித்து வருவதாகவும் குடிநீர் வசதி மலசல கூட வசதி பயிர்ச் செய்கைக்கான நீர் வசதி வீதிப் போக்குவரத்து வைத்திய வசதி மின்சார வசதி போன்ற எவ்வித அடிப்படைத் தேவைகளும் இன்றி இந்த மக்கள் அன்றாட தேவைகளுக்கே கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வன ஜீவராசிகள் தினைக்களம் வனவளத் திணைக்களம் ஆகியோர் அடிக்கடி வந்து தொல்லை தருவதாகவும் சில சமயங்களில் வழக்கு பதிவு செய்வதினால் நஸ்ட ஈடாக பெருந்தொகை பணத்தை கட்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அன்மையில் பெப்ரவரி மாதம் 25 ம் திகதி இதேபோன்று கல்லரிப்புச் சேனை நான்காம்கட்டை மூன்றாம் கட்டை ஆகிய கிராமங்களுக்குச் சென்ற வனவளத் திணைக்கள அதிகாரிகள் மக்கள் வாழ்ந்து வந்த13 குடிசைகளை எரித்துச் சாம்பலாக்கியதாகவும்.அத்துடன் தமது உணவுத் தேவைகளுக்காக சேமித்து வைத்திருந்த நெல்லு,பயறு, நிலக்கடலை, தேன் போன்றவற்றை எடுத்துச் சென்றதாகவும்  கூறினர்.

இவ்விடயம் தொடர்பில் வாகரைப் பொலிஸாருக்கு முறையிட்டதாகவும் ஆனால் எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பிரதேச சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ,கிராம சேவகர் மற்றும் அந்த பகுதியில் வேலை செய்யும் நிறுவணங்கள் ஆகியோருக்கு தெரியப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-14 06:09:04
news-image

20 கோடி ரூபா பெறுமதியான அதிநவீன...

2025-07-14 06:02:05
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28