bestweb

அம்பாறை - காரைதீவு பகுதியில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது

06 Jul, 2025 | 12:25 PM
image

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திய   சந்தேக நபரை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம்  சனிக்கிழமை (05)  இரவு  இடம்பெற்றுள்ளது.

காரைதீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீதி தடை ஏற்படுத்தி  சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில்   நபர் ஒருவர்  மோட்டார் சைக்கிளில் அப்பகுதியால் சந்தேகத்திற்கிடமாக வருகை தந்துள்ளார்.

இதன் போது குறித்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார் அந்நபரை சோதனை இட்ட போது 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 15 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் குறித்த போதைப்பொருட்களை கடத்தி வந்தவர் 25 வயதுடைய  ஏறாவூர் 06 பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்  என்பது ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

அத்துடன்  குறித்த சோதனை நடவடிக்கையானது அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்   வழிகாட்டுதலில் காரைதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி  தலைமையிலான குழுவினர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேக நபரை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காரைதீவு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32