(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மான் கில் ஓட்ட மழையுடன் சாதனை புரிய, இந்தியா வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓரே போட்டியில் இரட்டைச் சதத்தையும் 150க்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையை இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் ஷுப்மான் நிலைநாட்டினார்.
கில் முதலாவது இன்னிங்ஸில் 269 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்களையும் பெற்றார். இதன் மூலம் ஒரே டெஸ்டில் 430 ஓட்டங்களைப் பெற்ற ஷுப்மான் கில் ஒரே டெஸ்டில் அதிகப்படியான ஓட்டங்களைக் குவித்த இந்தியர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.
இங்கிலாந்தின் கிறஹாம் கூச் 1990இல் இந்தியாவுக்கு எதிராக பெற்ற 456 ஓட்டங்களே (333 + 123) ஒரு வீரரால் டெஸ்ட் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.
மேலும் இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் கில் மொத்தமாக பெற்ற 585 ஓட்டங்களானது இங்கிலாந்துக்கு எதிராக 2003இல் கிறேம் ஸ்மித் பெற்ற 621 ஓட்டங்களுக்கு அடுத்ததாக வீரர் ஒருவரால் முதல் 2 டெஸ்ட்களில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய மொத்த ஓட்டங்களாக பதிவாகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்தியா பெற்ற 1014 ஓட்டங்களானது இந்தியாவினால் ஒரு போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்டங்கள் என்ற சாதனையாக பதிவாகிறது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 2004ஆம் ஆண்டு பெற்ற 916 ஓட்டங்களே இந்தியாவினால் ஒரு டெஸ்டில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.
இது இவ்வாறிருக்க, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 535 ஓட்டங்களால் முன்னிலையில் இருப்பதுடன் கடைசி நாளான இன்று அதன் வெற்றிக்கு 7 விக்கெட்களை மாத்திரம் வீழ்த்த வேண்டி உள்ளது.
போட்டியின் நான்காம் நாளான நேற்றைய தினம் தனது 2ஆவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா, 6 விக்கெட் இழப்புக்கு 427 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டு இங்கிலாந்துக்கு 608 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
நேற்றைய தினம் 4ஆவது விக்கெட்டில் ரிஷாப் பான்ட்டுடன் 110 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷுப்மான் கில், 5ஆவது விக்கெட்டில் ரவிந்த்ர ஜடேஜாவுடன் மேலும் 175 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
தொடர்ந்து 608 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
எண்ணிக்கை சுருக்கம்
இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து587 (ஷுப்மான் கில் 269, ரவிந்த்ர ஜடேஜா 89, யஷஸ்வி ஜய்ஸ்வால் 87, வொஷிங்டன் சுந்தர் 42, ஷொயெப் பஷிர் 167 - 3 விக்., கிறிஸ் வோக்ஸ் 81 - 2 விக்., ஜொஷ் டங் (119 - 2 விக்.)
இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 407 (ஜெமி ஸ்மித் 184 ஆ.இ., ஹெரி ப்றூக் 158, மொஹமத் சிராஜ் 70 - 6 விக்., ஆகாஷ் தீன் 88 - 4 விக்.)
இந்தியா 2ஆவது இன்: 426 - 6 விக். டிக்ளயார்ட் (ஷுப்மான் கில் 161, ரவிந்த்ர ஜடேஜா 69, ரிஷாப் பான்ட் 65, கே.எல். ராகுல் 55, ஜொஷ் டங் 93 - 2 விக்., ஷொயெப் பஷிர் 119 - 2 விக்.)
இங்கிலாந்து 2ஆவது இன்: வெற்றி இலக்கு 608 ஓட்டங்கள் - நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 72 - 3 விக். (பென் டக்கெட் 25, ஒல்லி போப் 24 ஆ.இ., ஹெரி ப்றூக் 15 ஆ.இ., ஆகாஷ் தீப் 36 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM