விம்­பிள்டன் டென்­னிஸின் ஆண்­க­ளுக்­கான ஒற்­றையர் பிரிவின் சம்­பியன் யார் என்­பதை தீர்­மா­னிக்கும் போட்­டியில் சுவிட்­ஸர்­லாந்தின் ரொஜர் பெடரர் மற்றும் குரே­ஷி­யாவின் மரின் சிலிச் ஆகியோர் இன்று பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளனர். இப்­போட்டி இன்று இலங்கை நேரப்­படி மாலை 6.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்­டி­களில் ஒன்­றான விம்­பிள்டன் ‍டென்னிஸ் போட்டி இங்­கி­லாந்தின் லண்டன் நகரில் கடந்த 3 ஆம் திகதி முதல் நடை­பெற்று வரு­கி­றது. தற்­போது நிறைவு கட்­டத்தை எட்­டி­யுள்ள விம்­பிள்­டனில் ஆண்­க­ளுக்­கான ஒற்­றையர் இறு­திப்­போட்­டியில் குரே­ஷி­யாவின் மரின் சிலிச் முதல்­மு­றை­யாக இறு­திப்­போட்­டிக்கு நுழைந்­துள்ளார்.

இவர் அரையிறு­திப்­போட்­டியில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் சேம் குரே­ரியை எதிர்த்­தா­டினார்.இதன் முதல் செட்டை சிலிச் இழந்­தாலும் அடுத்­த­டுத்த செட் ஆட்­டங்­களில் சிறப்­பான ஆட்­டத்தை வெளிக்­காட்­டினார். சேம் குரேரி, சிலிச்­சுக்கு சவால் அளித்­தாலும் குரே­ரியால் அடுத்த செட்­களை வெல்ல முடி­யா­து­போ­னது. நான்கு செட்கள் வரை நீடித்த இந்த போட்­டியின் இறு­தியில் 6-7 6-4 7-6 7-5 என்ற செட் கணக்கில் சிலிச் வெற்றி பெற்று முதன் முறை­யாக விம்­பிள்டன் இறு­திப்­போட்­டிக்கு தகுதி பெற்றார். 

இரண்­டா­வது அரை­யி­றுதிப் போட்­டியில், சுவிட்­ஸர்­லாந்தின் ரொஜர் பெடரர் மற்றும் செக் குடி­ய­ரசின் தோமஸ் பேர்டிச் ஆகியோர் பலப்­ப­ரீட்சை நடத்­தினர். முன்­னணி வீர­ரான பெட­ர­ருக்கு மிகவும் சவா­லாக பேர்டிச் விளை­யா­டினார். இருப்­பினும், அவரால் ஒரு செட்டை கூட வெல்ல முடி­ய­வில்லை. முடிவில் 7-6, 7-6, 6-4 என்ற கணக்கில் பெடரர் வென்று 11ஆவது தட­வை­யாக விம்­பிள்டன் இறு­திப்­போட்­டிக்கு முன்­னே­றினார். 

இப்­போட்­டியில் பெடரர் வெற்றி பெறும் பட்­சத்தில்  19 ஆவது தட­வை­யாக கிராண்ட்­ஸலாம் பட்­டத்தை வெல்வார். மாறாக சிலிச் வெற்றி பெறும் பட்­சத்தில் இரண்டாவது தடவையாக கிராண்ட்ஸ்லாம் பட்­டத்தை கைப்­பற்­றுவார்.

இதே­வேளை, பெண்­க­ளுக்­கான ஒற்றையர் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும் ஜேர்மனியின் முகுருசாவும் நேற்றைய தினம் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.