எம்மில் சிலர் ஒவ்வொரு முறையும் சிரமங்களை எதிர்கொள்ளும் போது அவர்களுடைய குடும்ப ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று அவருடைய வழிகாட்டுதல் படி பரிகாரத்தையும், தானத்தையும் மேற்கொள்வர். ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தற்காலிகமாகத்தான் குறைகிறதே தவிர நிரந்தரமாக குறையவில்லை என சிலர் வருத்தம் அடைவார்கள். மேலும் வேறு சிலருக்கு ஜாதகம் -ஜோதிடம் -பரிகாரம் - குறித்து எதிர்மறையான எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்குவார்கள். இந்த தருணத்தில் நீங்கள் நினைத்ததை ..நீங்கள் கேட்டதை கொடுக்கும் சூட்சம வழிபாட்டை எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
பொதுவாக நட்சத்திரங்கள் 27 என்றுதான் அறிந்திருப்போம். ஆனால் 28 ஆவதாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்றும், அது அபிஜித் நட்சத்திரம் என்றும் குறிப்பிடுகிறார்கள். அதே தருணத்தில் நாளாந்தம் உச்சி வேளையில் 11:45 முதல் 12 15 வரையிலான காலகட்டத்தை அபிஜித் முகூர்த்த தருணம் என குறிப்பிட்டிருப்பார்கள். இந்த தருணத்தை பயன்படுத்துபவர்கள் அந்த தருணத்தில் காரியத்தை தொடங்கியவர்கள் வெற்றி பெறுவதை தொடர்ச்சியாக காண இயலும்.
இந்நிலையில் அந்த 28 ஆவது நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரம் குறித்து பலரும் அறிந்து கொள்ள ஆவலாக தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பர். உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம் மற்றும் திருவோண நட்சத்திரம் முதல் பாதம் இந்த இரண்டு நட்சத்திரத்தின் இறுதி மற்றும் முதல் 12 நிமிடங்கள் தான் அபிஜித் நட்சத்திர நேரம் என குறிப்பிடப்படுகிறது. உத்திராட நட்சத்திரத்தின் நான்காம் பாத இறுதியிலும் , திருவோண நட்சத்திரம் முதல் பாதத்தின் தொடக்கத்திலும் 12 + 12 என மொத்தம் 24 நிமிடங்கள் தான் அபிஜித் நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திர தருணத்தில் நீங்கள் கிருஷ்ண பரமாத்மாவின் புகைப்படத்தை உங்களது பூஜை அறையில் வைத்து அதற்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி ,சிறிதளவு கற்கண்டு அல்லது உலர் திராட்சையை நிவேதனமாக படைத்து, உங்களது கோரிக்கையை சமர்ப்பித்தால் அந்த கோரிக்கை நிறைவேறும் என்பது உறுதி.
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தவறாமல் இடம்பெறும் அபிஜித் நட்சத்திரம் இந்த மாதம் ஜூலை 12ஆம் திகதியன்று காலை 8 மணி அளவில் இடம்பெறுகிறது. அதாவது எதிர்வரும் சனிக்கிழமை அன்று காலை 7:48 முதல் 8 12 நிமிடங்கள் வரையிலான காலகட்டம் அபிஜித் நட்சத்திரமாக வருகிறது. இதனை நினைவில் வைத்து மேலே விவரிக்கப்பட்ட வகையில் கிருஷ்ண பரமாத்மாவை வணங்கினால் அல்லது குலதெய்வத்தை வணங்கினால் உங்களுடைய கோரிக்கை நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM