இன்றைய திகதியில் பலருக்கும் பல்வேறு விவரிக்க இயலாத காரணங்களுக்காக குருதி அழுத்த பாதிப்பு அதிகரித்து, அதனை மருந்தியல் சிகிச்சைகளின் மூலம் கட்டுப்படுத்தி வருகிறார். ஆனாலும் சிலருக்கு குருதி அழுத்த பாதிப்பு கட்டுப்படுத்த இயலாத நிலை நிலவுகிறது. இதற்காக எம்முடைய வைத்திய நிபுணர்கள் பிரத்யேக நவீன சிகிச்சையை கண்டறிந்திருப்பதாகவும், அது நல்ல பலனை வழங்கி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
ரத்த அழுத்த பாதிப்பை கட்டுப்படுத்தவில்லை என்றால் இதயம் உள்ளிட்ட முக்கியமான உறுப்புகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தல் உண்டாகும். இதன் காரணமாக தற்போது குருதி அழுத்த பாதிப்பை எதிர்கொள்பவர்கள் நாளாந்தம் அதற்குரிய மருந்தியல் சிகிச்சையை தவறாமல் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் சிலர் இதனால் விவரிக்க இயலாத அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் இத்தகைய பாதிப்பிற்கு தற்போது வைத்திய நிபுணர்கள் ஆர் டி என் எனப்படும் ரீனல்டிநெர்வேசன் தெரபி எனப்படும் நுண் துளை சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, இதற்கு நிவாரணம் அளிக்கிறார்கள்.
சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் தான் குருதி அழுத்த பாதிப்பு உண்டாகிறது என கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் இத்தகைய சிகிச்சையின் போது அத்தகைய நரம்புகளின் செயல்பாட்டை சீரமைக்கிறார்கள். இதன் மூலம் குருதி அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலும் என வைத்திய நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
அதே தருணத்தில் இத்தகைய நவீன சிகிச்சை ரத்த அழுத்த பாதிப்புள்ள அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தாது என்றும், மருந்தியல் சிகிச்சைகள் மூலம் குருதி அழுத்த பாதிப்பு கட்டுப்படாத நிலையிலும் அதனால் விவரிக்க இயலாத சிரமங்களை எதிர்கொள்வோர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
வைத்தியர் மனோகர்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM