தமிழ் சினிமாவின் லாபகரமான குணச்சித்திர நடிகரான காளி வெங்கட் கதை நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் ' ஹவுஸ்மேட்ஸ் 'எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஹவுஸ்மேட்ஸ் 'எனும் திரைப்படத்தில் காளி வெங்கட், தர்ஷன், தீனா, அப்துல் லீ, ஹர்ஷா பைஜூ, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளேஸ்மித் ஸ்டுடியோஸ் மற்றும் கனா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் எஸ். சத்ய பிரகாஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில்.. இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'ஸ்கூல் மேட்ஸ்', 'காலேஜ் மேட்ஸ்', 'ரூம் மேட்ஸ்', 'கிளாஸ் மேட்ஸ்' என ஏராளமான மேட்ஸ்களை பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். அது என்ன புது ஹவுஸ் மேட்ஸ்? என்பதை விரைவில் திரையில் காணலாம் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM