நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்த “பஹட்டியா” யானை!

05 Jul, 2025 | 05:31 PM
image

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் குருணாகல் நிக்கவரெட்டிய மானிகம வனப்பகுதியில் சுற்றித்திரிந்த “பஹட்டியா” என்ற யானை ஒன்று நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்துள்ளது.

நீர் நிரம்பிய குழியில் விழுந்த யானையை பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“பஹட்டியா” யானையின் தலை நீரில் மூழ்காமல் இருப்பதற்காக யானையின் தலையை சுற்றி மணல் மூட்டைகள் போடப்பட்டுள்ளன.

அத்துடன், “பஹட்டியா” யானையை வெயிலிருந்து பாதுகாப்பதற்காக யானையை சுற்றி துணியினால் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

நீர் நிரம்பிய குழியில் விழுந்த “பஹட்டியா” யானைக்கு இராணுவ வீரர்கள் உணவும் வழங்கியுள்ளனர்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து “பஹட்டியா” யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிழக்கு புகையிரத பிரச்சினைகளுக்கு நேரடி கள...

2026-07-10 15:31:04
news-image

சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும்...

2026-07-10 20:04:01
news-image

சிறைச்சாலை அனர்த்தம் அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகிறது...

2026-07-10 12:46:16
news-image

கந்தளாயில் டிப்பர் - மோட்டார் சைக்கிள்...

2026-07-10 19:57:00
news-image

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம்:...

2026-07-10 19:51:18
news-image

67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது...

2026-07-10 19:26:46
news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல்...

2026-07-10 19:13:12
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12