bestweb

நடிகர் வசந்த் ரவி நடிக்கும் ' இந்திரா' பட பிரத்யேக காணொளி வெளியீடு

Published By: Digital Desk 2

05 Jul, 2025 | 05:18 PM
image

'தரமணி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமாகி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 'படத்தின் மூலம்  பிரபலமான நடிகர் வசந்த் ரவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' இந்திரா'  எனும் திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரையும் படக்குழுவினர் பிரத்யேக காணொளி வடிவில் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்திரா 'எனும் திரைப்படத்தில் வசந்த் ரவி, மெஹரின் பிர்ஸாதா, சுனில் ,அனிகா சுரேந்திரன், கல்யாண், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே எஸ் எம் மூவி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜாபர் சாதிக் மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விரைவில் பட மாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கான பிரத்யேக காணொளியில் நாகேந்திரா, கல்யாண், கயல், மெஹ்ரீன் பிர்ஸாதா, மதி, அனிகா சுரேந்திரன், அபிமன்யு, சுனில், இந்திரா, வசந்த் ரவி ஆகியோரின் கதாபாத்திர தோற்றங்களும் கதாபாத்திர பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே 'தரமணி', 'ராக்கி', 'அஸ்வின்'ஸ்', 'ஜெயிலர்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான வசந்த் ரவி கதையின் நாயகனாக நடித்திருப்பதாலும், இப்படத்தின் கதாபாத்திர தோற்றங்கள் பென்சில் ட்ராயிங் எனப்படும் பிரத்யேக வடிவத்தில் வெளியிடப்பட்டிருப்பதாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right