கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு

05 Jul, 2025 | 03:58 PM
image

கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent) மாணவர் பாராளுமன்ற  ஆரம்ப அமர்வு வெள்ளிக்கிழமை (04) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ திட்டத்துடன் இணைந்ததாக கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

இதன்போது,  இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம்  குஷானி ரோஹனதீரவினால் எதிர்கால தலைமைத்துவம், பாராளுமன்ற மரபின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறித்து மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதனுடன் இணைந்ததாக மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதோடு இலங்கை வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன.

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கே.எம்.என் குமாரசிங்க, ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, பணிப்பாளர் (முப்படை ஒருங்கிணைப்பு) எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, உதவி பணிப்பாளர் நதீக தங்கொல்ல, கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் அதிபர் மேரி திலானி ஜெயமான்ன மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள்...

2026-06-13 13:53:19
news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45