அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடுமெனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மழை தொடர்ந்து பெயததால் குறித்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்னர்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க பேரிடர் குழுக்களால் தீவிர தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் லெப்டினன்ட் டொன் பற்றிக் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸ் வழியாகப் பாயும் குவாடலூப் நதியின் நீர்மட்டம் 45 நிமிடங்களில் சுமார் 26 அடி உயர்ந்துள்ளதால் அங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குவாடலூப் நதிக் கரையில் உள்ள மத அமைப்பொன்றின் பெண்கள் முகாமொன்றிலிருந்த 25 சிறுமிகள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெக்சாஸில் சுமார் 40 வருடங்களின் பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் பல உலங்குவானூர்திகளும் களத்தில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கினறன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM