ஜப்பான் அரசாங்கத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நன்கொடை 

05 Jul, 2025 | 01:04 PM
image

ஜப்பான் அரசாங்கம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பல தொழில்நுட்ப உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் (International Organization for Migration - IOM) துணையுடன் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த தொழில்நுட்ப உபகரணங்கள்  வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் எல்லை தயார்நிலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நவீனமயமாக்கல் திட்டங்களை எடுத்துக்காட்டுகிறது.

ஜப்பானிய அரசாங்கத்தின் 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்த தொழில்நுட்ப உபகரணங்கள்  இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முதல்முதலில் அறிமுகப்படுத்தப்படும் பல தொழில்நுட்ப உபகரணங்கள் இதில் அடங்குகின்றன.

அத்துடன் இலங்கைக்கு மேலும் பல நன்கொடைகளை வழங்க ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சரக்குகளை பரிசோதனை செய்யும் உபகரணங்கள், பரிசோதனை இயந்திரங்கள் , விமான நிலைய கழிவுகளை சேகரிக்கும் லொரிகள், 50 யூரோ வண்டிகள் போன்றவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்கும் இலங்கைக்கு பல நன்கொடைகளை வழங்க ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:27:05
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23