bestweb

நால்வர் மாத்திரம் பிரகாசித்த 3ஆம் நாளன்று ஸ்மித் 184 ஆ.இ., ப்றூக் 158, சிராஜ் 6 விக்., ஆகாஷ் 4 விக்., அறுவர் பூஜ்ஜியம்

Published By: Vishnu

05 Jul, 2025 | 12:44 AM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை (04) நான்கு வீரர்கள் மாத்திரம் பிரகாக்க, ஆட்ட நேர முடிவில் இந்தியா 244 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இன்றைய தினம் இங்கிலாந்து சார்பாக இருவர் அபார சதங்கள் குவித்ததுடன் இந்திய பந்துவீச்சில் இருவர் 10 விக்கெட்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இங்கிலாந்தின் முதலாவது இன்னிங்ஸில் ஹெரி ப்றூக், ஜெமி ஸ்மித் ஆகிய இருவரும் சதங்கள் குவிக்க பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 6 விக்கெட் குவியலையும் ஆகாஷ் தீப் 4 விக்கெட் குவியலையும் பதிவு செய்தனர்.

இங்கிலாந்து இன்னிங்ஸில் ஆறு வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தது ஆச்சரியத்தக்க விடயமாகும்.

போட்டியின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 407 ஓட்டங்களைப் பெற்றது.

ஜோ ரூட் 22 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்க இங்கிலாந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. (84 - 5 விக்.)

ஆனால், ஹெரி  ப்றூக், ஜெமி ஸ்மித் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 303 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை கௌரவமான நிலையில் இட்டனர்.  

ஹெரி  ப்றூக்   234 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 158 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரது ஆட்டம் இழப்புடன் கடைசி 5 விக்கெட்கள் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

மிகவும் அபாரமாகவும் ஆக்ரோஷத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஜெமி ஸ்மித் 207 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 184 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் பென் டக்கெட், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ், ப்றைடன் கார்ஸ், ஜொஸ் டங், ஷொயெப் பஷிர் ஆகியோர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 70 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் ஆகாஷ் தீப் 88 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

முதலாவது இன்னிங்ஸில் 587 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்தியா, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய இரண்டாவது  இன்னிங்ஸில்  9 விக்கெட்கள் மீதம் இருக்க இந்தியா 244 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜய்ஸ்வால் 28 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

கே.எல். ராகுல் 28 ஓட்டங்களுடனும் கருண் நாயர் 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை...

2025-07-13 14:42:53
news-image

இங்கிலாந்து - இந்தியா மூன்றவாது டெஸ்ட்:...

2025-07-13 06:00:42
news-image

ஐ.சி.சி. ஆடவர் இருபதுக்கு - 20...

2025-07-12 09:43:48
news-image

மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 7...

2025-07-11 23:46:54
news-image

இங்கிலாந்து 251 - 4 விக்.,...

2025-07-11 05:24:07
news-image

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின்...

2025-07-10 22:30:31
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 155 ஓட்டங்கள்

2025-07-10 20:43:20
news-image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் தரவரிசையில்...

2025-07-09 20:27:23
news-image

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை -...

2025-07-09 20:22:32
news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46