bestweb

கொழும்பில்  கலம்போ கிக்கர்ஸ் ஏற்பாடு செய்துள்ள  'ஜுவென்டஸ் பயிற்சி முகாம்' 

Published By: Priyatharshan

04 Jul, 2025 | 08:31 PM
image

(வீ.பிரியதர்சன் )

'இலங்கையில் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் உள்ளனர். எங்களது அனுபவங்களையும் திறன்களையும் இங்குள்ள இளம் வீரர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக நாம் காத்திருக்கின்றோம். எனவே கால்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள இளம் வீரர்கள், ரசிகர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெபெறவேண்டும்' என இலங்கைக்கு வருகை தந்துள்ள இத்தாலியின்  ஜுவென்டஸ்   கால்பந்தாட்ட கழக பயிற்சியத்தின் தலைமை பயிற்றுனர் ஃபாபியோ தெரிவித்தார்.

கலம்போ  கிக்கர்ஸ் (Colombo Kickerz) கால்பந்தாட்ட பயிற்சியத்தின் 10 ஆவது வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  ' ஜுவென்டஸ்   பயிற்சி முகாம்' எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தினமும் செயல்முறைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு ஹில்டன் ரெசிடன்ஸில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றது. இதன் போது ColomboKickerz என்ற செயலியொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த செயலியில்  கலம்போ  கிக்கர்ஸ்   ( Colombo Kickerz) கால்பந்தாட்ட பயிற்சியகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜேர்சிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட இத்தாலியின்  ஜுவென்டஸ்   கால்பந்தாட்ட கழக பயிற்சியகத்தின் தலைமை பயிற்றுநர்  ஃபாபியோ

'இலங்கைக்கு நாம் முதல் தடவையாக வந்துள்ளோம். எம்மை இங்கு அழைத்தமைக்கு  கலம்போ  கிக்கர்ஸ்   ( Colombo Kickerz) கால்பந்தாட்ட பயிற்சி யக அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையில் பிரித்தானிய ஆட்சி நிலவியதால் அன்று தொட்டு இன்று வரை சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு நாம் தொழில்முறை மற்றும் திறன் தொடர்பான தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகளை வழங்கவுள்ளோம்' என்றார்.

கலம்போ  கிக்கர்ஸ்   ( Colombo Kickerz) கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஸ்தாபகரும் உரிமையாளருமான விவேகா வீரசிங்க பேசுகையில்,

'2015 ஆம் ஆண்டில் எனது மகனின் விருப்பத்திற்காக அமைய, அவரது 5 நண்பர்களை இணைத்து ஒரு சிறிய குழுவாக இதனை ஆரம்பித்தேன். இன்று 10 வருடங்களைக் கடந்து பயணிக்கின்றது. தற்போது   கலம்போ  கிக்கர்ஸ்   ( Colombo Kickerz) கால்பந்தாட்ட பயிற்சியகத்தில் 352 இளம் வீர, வீராங்கனைகள் உள்ளனர். வாரத்தில்  4 நாட்கள் பயிற்சிகள் இடம்பெறுகின்றன. இங்கு பயிற்சிக்கு அப்பால் வீர்களுக்கு, குழு செயற்பாடு,நேர்மைத்தன்மை, ஒழுக்கம், விளையாட்டு வீரருக்குரிய பண்புகள் உள்ளிட்ட பல சிறந்த விடயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது' என்றார்.

கலம்போ  கிக்கர்ஸ்   ( Colombo Kickerz) கால்பந்தாட்ட பயிற்சியகத்தின்   பிரதம செயற்பாட்டு அதிகாரி ரொமாரியோ டி சில்வா தெரிவிக்கையில்,

'நான் பார்ஸிலோனாவுக்கு சென்றபோது  ஜுவென்டஸ்   கால்பந்தாட்டப் பயிற்சியகம் தொடர்பான ஆரம்ப உரையாடல் இடம்பெற்றது. அதன் பின்னர்  கலம்போ  கிக்கர்ஸ்   ( Colombo Kickerz) கால்பந்தாட்ட  பயிற்சியகத்தின் 10 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இலங்கைக்கு வருகைத் தந்து பயிற்சி முகாம் ஒன்றை நடத்துமாறு வெண்டுகோள் விடுத்திருந்தேன். அந்த வேண்டுகோள் ஃபாபியனின் வருகை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது' 

'எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் ஆரம்பிக்கப்படவுள்ள கலம்போ  கிக்கர்ஸ்  ( Colombo Kickerz) கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் 'ஜுவென்டஸ் பயிற்சி முகாம்'க்கு வருகை தந்துள்ள பயிற்றுனர்களுக்கும் எமது பயிற்றுனர்களுக்கும் இடையிலான பயிற்சி முகாம் நடைபெறும். பின்னர் இளம் வீரர்களுக்கான பயிற்சி முகாம் இடம்பெறும். இந்த பயிற்சி முகாமில் கால்பந்தாட்ட விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள முடியும்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை...

2025-07-13 14:42:53
news-image

இங்கிலாந்து - இந்தியா மூன்றவாது டெஸ்ட்:...

2025-07-13 06:00:42
news-image

ஐ.சி.சி. ஆடவர் இருபதுக்கு - 20...

2025-07-12 09:43:48
news-image

மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 7...

2025-07-11 23:46:54
news-image

இங்கிலாந்து 251 - 4 விக்.,...

2025-07-11 05:24:07
news-image

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின்...

2025-07-10 22:30:31
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 155 ஓட்டங்கள்

2025-07-10 20:43:20
news-image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் தரவரிசையில்...

2025-07-09 20:27:23
news-image

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை -...

2025-07-09 20:22:32
news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46