உலகம் முழுவதும் எட்டாயிரம் பெண் பிள்ளைகளில் ஒருவருக்கும் , நான்காயிரம் ஆண் பிள்ளைகளில் ஒருவருக்கும் ஆட்டிச பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது .
இதன் மூலம் இத்தகைய பாதிப்பிற்கு பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உறுதியாகிறது. மேலும் இதற்கான காரணத்தையும் வைத்திய நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
பிள்ளைகள் பிறந்து இரண்டு வயதிற்குள் அவர்களுடைய பேச்சு - நடவடிக்கை - செயல்பாடு - சமூக தொடர்பு - போன்ற திறன்களில் சமச்சீரான வளர்ச்சியைப் பெறவில்லை என்றால் அவர்கள் ஆட்டிச பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடும் என அவதானிக்கலாம்.
இதுபோன்ற பிள்ளைகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு ஓக்குபேஷனல் தெரபி - ஸ்பீச் தெரபி - பிஹேவியர் தெரபி போன்ற சிகிச்சைகளை ஒருங்கிணைந்து வழங்கும் போது அவர்கள் இத்தகைய பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற்று, தங்களை தாங்களே நிர்வகித்து பராமரித்துக் கொள்ளும் அளவிற்கு முன்னேற இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் இத்தகைய பாதிப்பிற்கு மரபணு குறைபாடு காரணம் என விவரிக்கப்பட்டாலும், அதில் துல்லியமாக ஃபிரஜைல் எக்ஸ் சிண்ட்ரோம் எனும் நோய்க்குறி தான் முதன்மையான காரணம் என கண்டறிந்திருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் இந்த பாதிப்பிற்கும் மேலே விவரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம் முறையான நிவாரணத்தை பெற இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர் ஸ்ரீனிவாஸ்
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM