bestweb

'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கும் 'ஹர ஹர வீர மல்லு' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

04 Jul, 2025 | 08:55 PM
image

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஹர ஹர வீர மல்லு - பார்ட் 1 ' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர்கள் கிரிஷ்- ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' ஹர ஹர வீர‌ மல்லு பார்ட் 1 ' திரைப்படத்தில் பவன் கல்யாண், பொபி தியோல் , நிதி அகர்வால் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓஸ்கார் விருதினை வென்ற எம். எம். கீரவாணி  இசையமைத்திருக்கிறார். வரலாற்றில் நடைபெற்ற சம்பவங்களை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை மெகா சூர்யா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. தயாகர் ராவ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியிடப்பட்டிருக்கிறது.  இப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் எதிரிகளாக வாழ்ந்த கால கட்டத்தை பிரதிபலிக்கும் இந்த திரைப்படம் - தற்போதைய இந்திய அரசியல் சூழலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி, வசூலை வாரி குவிக்கும் என அவதானிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right