bestweb

இயக்குநர் அருண்குமார் வெளியிட்ட 'மதுரை 16' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Published By: Digital Desk 2

04 Jul, 2025 | 10:30 PM
image

நடிகர் ஜெரோம் விஜய் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' மதுரை 16 ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரபல இயக்குநர் எஸ். யு. அருண்குமார் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஜோன் தோமஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ' மதுரை 16' எனும் திரைப்படத்தில் ஜெரோம் விஜய் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரிஸ்வான் கான் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் ஆறுமுகம் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களின் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே எஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீதேவி சின்னையா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் கதையின் நாயகன் காவல்துறையின் துன்புறுத்தல் ரீதியிலான விசாரணையை எதிர்கொள்வது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும் நபர்கள் காவலர்களின் விசாரணையில் மரணமடைவதன் பின்னணியை உரக்க பேசும் படைப்பு என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right