இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக மொஹிட்  சர்மா தனது மனக்கவர் காதலியான ஸ்வேதாவுடன்  வெகுவிரைவில்  திருமணபந்தத்தில் இணையவுள்ளார் .

மொகித் சர்மாவிற்கும் ஸ்வேதாவிற்கும் நேற்றுக்கு முன்தினம்  திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அவர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது பெண் தோழிகளை திருமணம் செய்து கொண்டனர். அதிரடி வீரரான யுவராஜ் சிங்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .