bestweb

சசிகுமார் நடிக்கும் 'ஃபிரீடம்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

04 Jul, 2025 | 08:59 PM
image

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சசிகுமார் நடிப்பில் தயாரான ' ஃபிரீடம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரபல இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஃபிரீடம் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மாளவிகா அவினாஷ்,  போஸ் வெங்கட் , ரமேஷ் கண்ணா, சுதேவ் நாயர், 'பொய்ஸ் ' மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழ ஏதிலிகள் எதிர்கொண்ட துயரங்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜயா கணபதி'ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகள் இன ரீதியிலான உணர்வை தூண்டுவதால்  தமிழகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று அவதானிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right