bestweb

நடிகர் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடிக்கும் 'பாரடாக்ஸ் ' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

04 Jul, 2025 | 08:59 PM
image

'ஈசன் 'படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான நடிகர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் திரையில் தோன்றும் ' பாரடாக்ஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாரடாக்ஸ்' திரைப்படத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் -‌ நடிகை மீஷா கோஷல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஃபைசல் வி காலீத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். மனநிலை பிறழ்வு கொண்ட கதாபாத்திரத்தை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை தி சைலர் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் பதினோராம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மனநிலை தடுமாற்றத்தில் இருப்பது போன்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இடம்பிடித்திருப்பதால் ரசிகர்களிடம் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right