bestweb

'லவ் மேரேஜ் படத்திற்காக அப்பாவிடம் பாராட்டை பெற்றேன்' - விக்ரம் பிரபு உற்சாகம்

Published By: Digital Desk 2

04 Jul, 2025 | 05:49 PM
image

'லவ் மேரேஜ் படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறாய் என்று அப்பா பாராட்டினார்'' என விக்ரம் பிரபு அப்படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் தெரிவித்தார்.

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான' லவ் மேரேஜ்' எனும் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடத்தில் பாரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

இதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட பிரத்யேக நிகழ்வில் பங்கு பற்றி இயக்குநர் சண்முக பிரியன் பேசுகையில், '' திரையுலகில் எம்முடைய முதல் திரைப்படமாக குடும்ப ரசிகர்களை கவரும் வகையிலான ஒரு குடும்ப படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்து, இந்த கதையை தெரிவு செய்தேன். 'அக்காவை திருமணம் செய்து கொள்வதற்காக மணப்பெண்ணை சந்திக்க வரும் நாயகன் அக்காவை தவிர்த்து விட்டு தங்கையை திருமணம் செய்து கொள்கிறார்' என்ற இந்த கதையை விக்ரம் பிரபுவிடம் தெரிவித்த போது எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.

விக்ரம் பிரபு பேசுகையில், '' இப்படம் வெளியான பிறகு பட மாளிகைக்கு சென்று ரசிகர்களின் வரவேற்பினை காணும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்கள் இப்படத்தை ரசித்து பார்க்கிறார்கள் என்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட போது உற்சாகமடைந்தோம். இப்படத்தைப் பார்த்த அப்பா பிரபு நீண்ட நாள் கழித்து என்னிடம் 'இந்தப் படத்தில் சண்டைக் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறாய்' என பாராட்டினார். இதை கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது. இதனை சாத்தியமாக்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் , இந்தப் படக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right