இன்றைய சூழலில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக ஏற்பட்டிருப்பதால் சமூக வலைதளங்களின் பாவனை எதிர்பார்த்த அளவைவிட பிரம்மாண்டமாக அதிகரித்திருக்கிறது.
இதனால் எம்மில் பலரும் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தி எப்படி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் , வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும், சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
தங்களுக்குத் தெரிந்த விடயங்களை காணொளியாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அதனூடாக வருவாய் ஈட்டுபவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நீங்கள் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்காக சில சூட்சம குறிப்புகளை பாவிக்க வேண்டும் என எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நீங்கள் டிஜிற்றல் திரையிலோ அல்லது சின்னத்திரையிலோ அல்லது உங்களது பகுதியில் பிரபலமாக வேண்டும் என்றால் .. முதலில் நீங்கள் கவலைகள் ஏதும் இல்லாமல் உற்சாகமாக இருக்க வேண்டும்.
இதற்கு உற்சாகத்தின் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பட்டாம் பூச்சியை நீங்கள் நாளாந்தம் காண வேண்டும். இதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது.
இதனால் பட்டாம்பூச்சி வடிவத்திலான புகைப்படங்கள்- ஸ்டிக்கர்கள்- சிறிய அளவிலான சிலைகள் - ஆகியவற்றை நீங்கள் வாங்கி அதனை உங்களது வீட்டில் நாளாந்தம் கண்களில் படும்படி வைக்க வேண்டும்.
இதனை காணும் போதெல்லாம் உங்களுடைய கவலைகள் மறந்து உற்சாகம் பெறுவீர்கள். முகம் பொலிவு பெறும். ஜன வசியம் உண்டாகும்.
இதனைத் தொடர்ந்து ஐந்து ஸ்டார் போன்ற குறியீடுகளை ஒரு வெள்ளை தாளில் மேற்பகுதியில் ஒட்டி விடுங்கள். அதற்கு சற்று கீழே உங்களது புகைப்படத்தை இடம்பெறச் செய்யுங்கள்.
நாளாந்தம் நீங்கள் இந்த ஸ்டாருடன் கூடிய உங்களது புகைப்படத்தை பார்க்க பார்க்க இந்த பிரபஞ்சத்தின் வசீகர ஆற்றல் உங்கள் ஆராவுக்குள் புகுந்து மாயாஜால வசீகரத்தை ஏற்படுத்தி பிரபலமாக்கும்.
பெயரும், புகழும் கிடைக்கத் தொடங்கிய பிறகு அதனைத் தொடர்ந்து நீங்கள் எதிர்பார்க்காத வகையில் உங்களது வருவாய் வருவதை அனுபவத்தில் காணலாம். அதனூடாக மகிழ்ச்சியான வாழ்க்கையையும் வாழலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM