சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'கூலி ' படத்தில் பொலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கானின் கதாபாத்திர பெயர் மற்றும் தோற்றம் தொடர்பான பிரத்யேக போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படத்தில் இந்திய அளவிலான முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'கூலி ' திரைப்படத்தின் புதிய தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் அமீர்கான் ' தாஹா' என்ற கதாபாத்திரத்தில் தோன்றுவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் இவருக்கான கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டுள்ள படக்குழு புகை பிடிப்பது போல் வடிவமைத்திருப்பதால ஒரு தரப்பினரின் எதிர்ப்பையும், மற்றொரு தரப்பினரின் ஆதரவையும் பெற்று வருகிறது. ஆனாலும் அமீர் கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது
அவர் அணிந்திருக்கும் ஆடை- சிகை அலங்காரம் -அணிந்திருக்கும் அணிகலன்- அவருடைய ஸ்டைலான தோற்றம்- ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதனிடையே இந்த திரைப்படத்திற்கு இந்தியிலும் 'கூலி' எனும் பெயரில் வெளியிட முடியாத சூழல் இருந்தது. இதற்காக படக்குழு 'கூலி' படத்திற்கு இந்தியில் 'மஜ்தூர் ' என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது.
அதன் பிறகு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டு, 'கூலி' என்ற டைட்டில் இந்தியிலும் கிடைத்தது. இதனால் அமீர்கானின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டுள்ள படக்குழு, படத்திற்கு இந்தியிலும் 'கூலி' என்றே தெரிவித்து, அமீர்கானின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM