bestweb

ஷுப்மான் கில் சாதனை மிகு இரட்டைச் சதம்; மிகவும் பலம்வாய்ந்த நிலையில் இந்தியா, இங்கிலாந்து தடுமாற்றம்

Published By: Digital Desk 3

04 Jul, 2025 | 01:24 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில்லின் சாதனைமிக இரட்டைச் சதத்தின் உதவியுடன் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 587 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் 5 விக்கெட் இழப்புக்கு 310 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா, ஷப்மான் கில், ரவிந்த்ர ஜடேஜா ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட 203 ஓட்ட இணைப்பாட்டத்தின் பலனாக 550 ஓட்டங்களுக்கு மேல் குவித்தது.

இப் போட்டியில் தனது இரண்டாவது டெஸ்ட் இரட்டைச் சதத்தைக் குவித்த ஷுப்மான் கில் 269 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டம் இழந்தார்.

இந்திய அணித் தலைவர் ஒருவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை என்ற சாதனையை இதன் மூலம் ஷுப்மான் கில் ஏற்படுத்தினார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பூனேயில் 2019இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராத் கொஹ்லி பெற்ற ஆட்டம் இழக்காத 254 ஓட்டங்களே இந்திய அணித் தலைவர் ஒருவரால் டெஸ்ட் இன்னிங்ஸில் பெறப்பட்ட முந்தைய அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

கில் பெற்ற 269 ஓட்டங்களானது ஆசியாவுக்கு வெளியே இந்திய துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாகவும் பதிவானது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் 2004ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் பெற்ற ஆட்டம் இழக்காத 241 ஓட்டங்களே ஆசியாவுக்கு வெளியே இந்தியர் ஒருவர் பெற்ற இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6ஆவது விக்கெட்டில் ரவிந்த்ர ஜடேஜாவுடன் 203 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷுப்மான் கில் தொடர்ந்து 7ஆவது விக்கெட்டில் வொஷிங்டன் சுந்தருடன் மேலும் 144 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

கிட்டத்தட்ட எட்டரை மணித்தியாலங்கள் பொருமையுடன் துடுப்பெடுத்தாடிய ஷுப்மான் கில் 387 பந்துகளை எதிர்கொண்டு 30 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 269 ஓட்டங்களைக் குவித்தார்.

ரவிந்த்ர ஜடேஜா 89 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

இது இவ்வாறிருக்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டச் சபையின் வீரர்களுக்கான விதியை ஜடேஜா மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் விதிகளின் பிரகாரம் இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்றாகவே பஸ் வண்டியில் மைதானத்திற்கு செல்ல வேண்டும். 

ஆனால் ரவிந்த்ர ஜடேஜா துடுப்பாட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக தனியாக எஜ்பெஸ்டன் மைதானத்திற்கு சென்றுள்ளார். அவரது பயிற்சி வீண் போகவில்லை. இதன் பலனாக கில்லுடன் இரட்டைச் சத இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும் ஜடேஜாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுக்காது என தெரியவருகிறது.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 587 (ஷுப்மான் கில் 269, ரவிந்த்ர ஜடேஜா 89, யஷஸ்வி ஜய்ஸ்வால் 87, வொஷிங்டன் சுந்தர் 42, கருண் நாயர் 31, ஷொயெப் பஷிர் 167 - 3 விக்., கிறிஸ் வோக்ஸ் 81 - 2 விக்., ஜொஷ் டங் 119 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 77 - 3 விக். (ஹெரி ப்றூக் 30 ஆ.இ., ஸக் க்ரோவ்லி 19, ஜோ ரூட் 18 ஆ.இ., ஆகாஷ் தீப் 36 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை...

2025-07-13 14:42:53
news-image

இங்கிலாந்து - இந்தியா மூன்றவாது டெஸ்ட்:...

2025-07-13 06:00:42
news-image

ஐ.சி.சி. ஆடவர் இருபதுக்கு - 20...

2025-07-12 09:43:48
news-image

மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 7...

2025-07-11 23:46:54
news-image

இங்கிலாந்து 251 - 4 விக்.,...

2025-07-11 05:24:07
news-image

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின்...

2025-07-10 22:30:31
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 155 ஓட்டங்கள்

2025-07-10 20:43:20
news-image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் தரவரிசையில்...

2025-07-09 20:27:23
news-image

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை -...

2025-07-09 20:22:32
news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46