எந்த அர­சாங்­கமும் முகங்­கொ­டுக்க முடி­யாத பிரச்­சி­னை­க­ளுக்கு இன்று நாம் முகங்­கொ­டுத்து வரு­கின்றோம். அடுத்த மூன்று ஆண்­டு­களில்  4 ஆயி­ரத்து 600 பில்­லியன் ரூபாவை கட­னாக செலுத்­த­வேண்­டி­யுள்­ளது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். எமது தேசிய உற்­பத்­தியின் வரு­மா­னத்தில் 33 வீதத்தை வாங்­கிய கடன்­களை கட்ட ஒதுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

நெலுவ பிர­தே­சத்தில்  இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

 இது­வ­ரையில் இலங்­கையில் எந்த அர­சாங்­கமும் முகம்  கொடுக்­காத பிரச்­சி­னை­க­ளுக்கு இந்த அர­சாங்கம் முகங்­கொ­டுத்து வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் இன்று பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்றோம். இந்த ஆண்டில் பொரு­ளா­தாரம் தொடர்பில் நாம் முகங்­கொ­டுக்க வேண்­டிய சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்ளோம். பல்­வேறு பிரச்­சி­னைகள் எம்மை சூழ்ந்து உள்­ளன, நாட்டில் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் நகர்வில் நாம் மிகப்­பெ­ரிய சவாலை எதிர்­கொண்டு வரு­கின்றோம். அனர்த்தம் ஏற்­பட்ட கார­ணத்­தினால் விவ­சாயம் முற்­றாக பாதிக்­கப்­பட்­டது. அதேபோல் மின்­சார பிரச்­சி­னையும் ஏற்­பட்­டது. எரி­பொ­ரு­ளுக்கு புதிய பெறு­மானம் செலுத்த வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அதேபோல் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. இதனால் நாட்டின் தேசிய உற்­பத்­தியில் 0.5 வீதம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அதேபோல் மீதொட்­ட­முல்ல குப்பை  சரிந்து விழுந்­தது. இப்­போது டெங்கு நோய் ஏற்­பட்டு பல்­வேறு பிரச்­சி­னை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. இவை எமது சுற்­றுலா துறையின் வீழ்ச்­சி­யிலும் பங்­க­ளிப்பு செய்­கின்­றன. 

அதேபோல் அடுத்த மூன்று ஆண்­டு­களில்  4 ஆயி­ரத்து 600 பில்­லியன் ரூபாவை கட­னாக செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. நாம் வாங்­கிய கடன்­க­ளுக்­கான கால எல்லை நிறை­விற்கு வரு­கின்­றது.  எமது தேசிய உற்­பத்­தியின் வரு­மா­னத்தில் 33 வீதத்தை வாங்­கிய கடன்­களை கட்ட ஒதுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. வற்­வரி அதி­க­ரித்தோம், ஏனைய மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம் மக்­க­ளிடம் அதற்­கான அவ­ம­திப்­பையும் பெற்­றுக்­கொண்டோம். ஆனால் மாற்று நட­வ­டிக்­கை­களை நாம் கையாள வேண்­டிய நிலையில் அவற்றை மேற்­கொள்ள நேர்ந்­தது. இன்று அதில் தான் கட­னுக்­கான வட்­டி­யையும் நாம் செலுத்தி வரு­கின்றோம். இவ்­வா­றான நிலை­மை­களில் 2020 ஆம் ஆண்­ட­ளவில் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் சம­நிலைத் தன்­மையை ஏற்­ப­டுத்தி ,2025 ஆம் ஆண்­ட­ளவில் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடன்­களை பூர­ணப்­ப­டுத்தும்  நிலை­மை­க­ளுக்கும்  வரலாம். 

எனினும் கடந்த கால செயற்­பா­டு­களில் மேலும் இந்த நாட்­டிற்கு ஏற்­பட்­டுள்ள இழப்­பு­களை அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஊழல் மோசடிகள், அனாவசிய செலவு என்பவற்றை மேற்கொள்ள நேர்ந்த காரணத்தினால் தான் நாட்டின் கடன் தொகை அதிகரித்துள்ளது. இன்று நாம் அவற்றை சரிசெய்ய மக்களின் உதவிகளையே நாடவேண்டிய தேவை உள்ளது  என பிரதமர் கூறினார்.