bestweb

நுவரெலியாவில் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாட்டின் இரண்டாவது அமர்வு    

03 Jul, 2025 | 07:05 PM
image

தாஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாட்டின் முதலாவது அமர்வு  யாழ்ப்பாணம் பல்லைக்கழகத்தில்  கடந்த 30ஆம் திகதி நடைபெற்றது. 

இரண்டாவது அமர்வு நுவரெலியாவில் உள்ள மாவட்ட செயலகத்தின் கேட்போர்  கூடத்தில் நேற்று (02) நடைபெற்றது. 

மூன்றாவது அமர்வு  கொழும்பில் எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார்.

இம்மாநாட்டில்  தென்னாபிரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சுவிற்ஸர்லாந்து, நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து  பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்றார்கள். 

கொட்டக்கலை ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர்  ஜெயகாந்தன் சற்குருநாதன்  தலைமையில் இம்மாநாட்டில் நோக்கவுரையினை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர். க. பாஸ்கரனும்,  சிறப்பு விருந்தினர்  உரையினை தோட்டம் மற்றும் சமூக உள் கட்டமைப்பு மறு சீரமைப்பு பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும்  ஆலோசகருமான கலாநிதி பி. பி. சிவப்பிரகாசமும்,  சிறப்புரையினை கண்டி இந்திய துணைத் தூதுவர் மேனாள் ஏ. நடராஜன், மையக் கருத்தினை பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். விஜயச்சந்திரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர் உரையினை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்  ஆர். ராஜாராமும்,  நுவரெலியா கல்வி வலயத்தின் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்  நிர்மலா பத்மநாதனும் நாவலப்பிட்டி கதிர்வேலாயுதம் கோயிலின் அறங்காவலர்  முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தனும், அகில இலங்கை மகா சபைத் தலைவர்  சிவஸ்ரீ வேலுசுரேஷ்வர சர்மாவும் இந்து கலாசார பேரவையின் தலைவர்  ரெ. பாலகிருஷ்ணனும்,  ஸ்ரீசிவம் ஆதிசைவர் சித்தர் பீடத்தின் குருமுதல்வர்  யோகி கோபிநாத் சுமாமிகளும்   நன்றியுரையினை பாரீஸ் உலகச் செம்மொழித் தமிழர் சங்கத்தின்  தலைவர் நவரத்தினம் கணேஸ்வரனும் வழங்கினர். 

இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளராக தமிழ் நாட்டுப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன். ஸ்ரீ சிவம் ஆதிசைவம் சித்தர் பீடத்தின் குரு முதல்வர் யோகி. கோபிநாத்சுவாமி, இந்து கலாசார பேரவையின் தலைவர் ரெ. பாலகிருஸ்ணன், நவபிரகாஸ்ராஜன், கணக்காளர் காராளன் பிரதீஸ்குமார், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர் ஜீ. லோகிலதாசன், நம்சபரி சங்கீத சபா காப்பாளர் பாக்கியநாதன் லோகநாதன் ஆகியோருடன் கருத்தரங்கு அமர்வுப் பொறுப்பாளர்களாக இலண்டன் தமிழ் கல்வியகம் இயக்குநர் ச. முருகையா, பாரீஸ்  உலக செம்மொழிச் சங்க நிறுவினர் நவரத்தினம்  கணேஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழக முனைவர் ஆகியோர் பங்கேற்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின்...

2025-07-13 16:31:15
news-image

கொழும்பு காக்கைதீவு கடற்கரையில் பட்டத்திருவிழா

2025-07-12 18:25:02
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-07-12 18:14:03
news-image

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர்...

2025-07-12 12:17:32
news-image

யாழ் பல்கலைக்கழக சட்ட இதழ் "நீதம்"...

2025-07-12 12:58:15
news-image

35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த...

2025-07-11 13:16:52
news-image

உலக சரக்கு விமான விருதுகள் -...

2025-07-11 16:01:13
news-image

14 வது வருடமாகவும் தரம் 05...

2025-07-10 15:59:59
news-image

7 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள  Bocuse...

2025-07-11 12:26:25
news-image

சண்முகதாசன் நுற்றாண்டு மனப்பதிவுகள் : நினைவுப்...

2025-07-09 19:21:32
news-image

தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடி பரீட்சை...

2025-07-09 19:05:19
news-image

மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தில்...

2025-07-09 18:26:04