bestweb

LOLC அல்-ஃபலாஹ் வதீ அஃஹ் தங்க ஆபரண காப்பக வசதி 3 பில்லியன் ரூபா சாதனையை அடைந்துள்ளது

03 Jul, 2025 | 04:45 PM
image

LOLC Finance PLC நிறுவனத்தின் பதில் நிதி சார்ந்த சேவைகள் பிரிவான LOLC அல்-ஃபலாஹ், அதன் ‘வதீ அஃஹ் தங்க ஆபரண காப்பக வசதியை’ 3 பில்லியன் ரூபாவை விஞ்சிய பயனுள்ள ரொக்க முற்பண சேகரிப்பையும் தாண்டி சாதனையை அடைந்துள்ளது. 

இந்த மகத்தான சாதனை இலங்கையில் பரிணமித்து வருகின்ற நிதி சார்ந்த சேவைகள் சூழ்நிலையில் நெறிமுறையான, வெளிப்படையான மற்றும் குறிக்கோள் வாய்ந்த நிதி சார்ந்த தீர்வுகளின் நிமித்தம் அதிகரித்து வருகின்ற கேள்வியை குறித்து நிற்பதாக மேற்குறித்த இந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய தங்கக் கடன் வசதிகளை அடையாளப்படுத்தும் முகமாக மாற்றுவழி சிறப்பம்சங்களை வழங்குகின்ற ‘வதீ அஃஹ் தங்க ஆபரண காப்பக வசதியை’ ஆரம்பிக்கும் முகமாக இந்த LOLC Finance PLC நிறுவனம் நாட்டின் வங்கியியல் சாராத ஒரு முதல் நிதி நிறுவனமாக (NBFI) விளங்கியது.

வாடிக்கையாளர்கள் இந்த வதீ அஃஹ் தங்க ஆபரண காப்பக வசதியில் தமது தங்கத்தை பாதுகாப்பாக வைப்புச்செய்யலாம். இது வைப்புச்செய்யப்படும் தங்க ஆபரணங்களின் சரியான எடை, தரம் மற்றும் பெறுமானம் என்பவற்றை தெளிவாக விவரிக்கின்ற செல்லுபடியாகும் ஒரு தங்க ஆபரண காப்பக சான்றிதழை வழங்கும். 

LOLC நிறுவனத்தின் வலுவான  உட்கட்டமைப்புடன் இணைந்துள்ள இந்த வெளிப்படைத்தன்மை பாதுகாப்பு மற்றும் நெறிமுறையான நிதி சார்ந்த நடத்தை ஆகிய இரண்டையும் மதிக்கின்ற SMEகளும் மற்றும் நடுத்தர வருமானத்திலிருந்து குறைந்த வருமானம் வரையான பிரிவினர்களும் அடங்கலாக பெருமளவான மக்கள் மத்தியில் ஆழ்ந்த வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right