எதிர்­வரும் டிசம்பர் மாதம் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் நடை­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் எழுந்­துள்ள நிலையில் ஐக்­கிய தேசியக் கட்சி விகி­தா­சார தேர்தல் முறை­மை­யி­லேயே இத்­தேர்தல் நடை­பெ­ற­வேண் டும் என அதி­க­ளவில் விருப்பம் கொண்­டி­ருக்­கின்­றது. 

எனினும் எத்­த­கைய முறையில் தேர்­த­லொன்­றுக்கு முகங்­கொ­டுப்­பது என்­பது குறித்து இறுதி முடி­வு­வொன்றை எட்­டு­வ­தற்­காக எதிர்­வரும் காலப்­ப­கு­தியில் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உயர்­மட்­டத்­தி­ன­ருடன் சந்­திப்­பொன்றை நடத்­து­வ­தற்கும் அக்­கட்சி தயா­ராகி வரு­கின்­றது. 

இதே­நேரம் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது தொகு­தி­வாரிப் பிர­தி­நி­தித்­துவம் மற்றும் விகி­தா­சா­ரப்­பி­ர­தி­நி­தித்­துவம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய கலப்பு தேர்தல் முறை­மை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்தி அதன் ஊடாக எதிர்­வரும் தேர்­தல்­களை முகங்­கொ­டுப்­ப­தென்ற உறு­திப்­பாட்­டுடன் இருக்­கின்­றது.

அண்­மையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மக்கள் தமது தொகு­தி­யி­லி­ருந்து பிர­தி­நி­தி­யொ­ரு­வரை தெரிவு செய்­ய­வேண்­டு­மென்று விரும்­பு­கின்­றனர். ஆகவே அர­சி­ய­ல­மைப்பு விட­யத்­திற்கு முன்­ன­தாக தேர்தல் சீர்­தி­ருத்­த­மொன்றே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது எனக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆகவே பிர­தான கட்­சி­யாக ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் எந்­த­மு­றையில் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தென இது­வ­ரையில் தீர்­மா­ன­மொன்­றினை எடுத்து இணக்­கப்­பாட்­டிற்கு வராத நிலை­யி­லேயே இச்­சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது. 

இதே­வேளை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற  உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ர­னுக்கும், 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கு­மி­டையில் நடை­பெற்ற பிரத்­தி­யேகச் சந்­திப்­பொன்றின் போது, பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­து­வ­தற்கு பெரும்­பா­லான கட்­சி­க­ளி­டையே கொள்கை அடிப்­ப­டையில் இணக்கம் காணப்­பட்­டுள்ள முறை­யான தொகு­தி­வாரி முறைமை 70 சத­வீ­த­மா­கவும், விகி­தா­சர முறைமை 30சத­வீ­த­மா­கவும் கொண்­ட­தான கலப்பு முறை­யி­லேயே  உள்­ளூ­ராட்சி சபை மற்றும் மாகாண சபைத் தேர்­தல்­களை நடத்­து­மாறு யோச­னை­யொன்று முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த யோச­னையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏற்­றுக்­கொள்­வ­தாக கூறி­யுள்ள போதும் ஏனைய கட்­சி­களின் இறுதி முடி­வு­க­ளையும் பரி­சீ­லிக்­க­வுள்­ள­தா­கவும் கூறி­யுள்ளார்.  

அதே­நேரம் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்­ட­வ­ரைபு விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டு­மென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­வ­தோடு தாம் உள்­ளூ­ராட்சி தேர்­தலை சந்­திப்­ப­தற்கு தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் தொடர்ச்­சி­யாக தெரி­வித்து வரு­கின்­றனர்.

எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷின் அணியில் உள்ள சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அணி­யி­ன­ருடன் இணைந்து போட்­டி­யி­டு­வதன் ஊடா­கவே ஐ.தே.க.விற்கு பதி­லடி வழங்க முடியும் என்ற தமது நிலைப்­பாட்­டினை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு தெரி­வித்­துள்­ளனர். அதே­போன்று மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இதையொத்த கருத்து அவருடய நம்பிக்கைக்குரிய நபர்களான அமைச்சர் மகிந்த அமரவீர, ஜோன் செனவிரட்ன போன்றவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் அதுகுறித்து எவ்விதமான கருத்துக்களையும் இரு தலைவர்களும் வெளிப்படுத்தியிருக்காத நிலையில் கூட்டு எதிரணியில் உள்ள ஏனைய கட்சிகளின் தலைமைகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் தனித்து பயணம் மேற்கொள்வதே சிறந்தது என்றும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.