bestweb

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை!!?

Published By: Digital Desk 2

03 Jul, 2025 | 04:23 PM
image

இன்றைக்கு எம்மில் பலரும் நாளாந்தம் தலைவலியால் பாதிக்கப்படுவது இயல்பு. அதே தருணத்தில் தலைவலி தானே..! என நினைத்து மருந்தகங்களில் அங்குள்ள ஊழியர்கள் கொடுக்கும் மாத்திரையை சாப்பிட்டு நிவாரணம் தேடிக்கொள்வார்கள்.

இது ஆபத்தானது என்று எச்சரிக்கும் வைத்தியர்கள் , தலைவலி வந்தால் உடனடியாக வைத்தியர்களை சந்தித்து, அதற்கான காரணம் என்ன என்பதை பிரத்யேக பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில் ஆண்டுதோறும் உலக அளவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

கிளியோமா எனும் பாதிப்பு-  எம்முடைய மூளைப்பகுதியில் உள்ள நரம்புகளை இயக்கும் அல்லது அதன் செயல்பாட்டிற்கு காரணமாக திகழும் கிளைல் செல்களில் ஏற்படும் அசாதாரணமான வளர்ச்சியாகும். சிலருக்கு இத்தகைய செல்கள் முதுகெலும்பிலும் உருவாக கூடும்.

பொதுவாக கிளியோமாக்கள் வீரியம் மிக்கது. சில வகையான கிளியோமாகள் தான் மெதுவாக வளர்ச்சி அடையும். மூளையில் கட்டி ஏற்படுவது தான் இதன் முதன்மையான அறிகுறி ஆகும். இவை மூளை மற்றும் முதுகெலும்பு ஆகிய இடங்களில் மட்டுமே தோன்றும் என்பதால் இங்கு மட்டுமே அவை பரவும். அதே தருணத்தில் இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சைகளின் மூலம் நிவாரணம் பெறலாம் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

தலைவலி, மயக்கம், சோர்வு, வாந்தி , குமட்டல், நிற்பதில் தடுமாற்றம் , பார்வையில் தடுமாற்றம், பேசுவதில் குளறுபடி , மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் சமச்சீரற்ற தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.  மரபணு மாற்றம் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இதுபோன்ற பாதிப்பு மூளையில் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு எம் ஆர் டிராக்டோகிராபி எனும் பரிசோதனையை மேற்கொண்டு , பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.

மேலும் சிலருக்கு இன்ட்ராஒப்பரேட்டிவ் அல்ட்ரா சவுண்ட் மற்றும் நியுரோநேவிகேஷன் எனும் நவீன சிகிச்சை மூலம் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு மூளை பகுதியில் சேகரமாகி இருக்கும் அந்த புற்றுநோய் கட்டியை முழுவதுமாக அகற்றுவார்கள். அதன் பிறகு கதிர்வீச்சு சிகிச்சையை வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிப்பார்கள்.

இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் ஒருங்கிணைந்த சிகிச்சையை உறுதியாக மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வைத்தியர் அமீத்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56