இன்றைய சூழலில் எம்முடைய விற்பனை நிலையத்தில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு முழுமையாக கட்டணத்தை செலுத்துவதில்லை.
சில தருணங்களில் கட்டணத்தை விட குறைவாகவும், சில தருணங்களில் கடனும் சொல்லிவிட்டு வாங்கி செல்வார்கள். விற்பனை நிலையத்தை நடத்தும் தொழில் முனைவோரும் இதுவும் ஒரு வகையினதான வணிகம் என்பதை உணர்ந்து இவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் ஒரு எல்லைக்கு மேல் பொருட்கள் விற்பனையின் எல்லை அதிகமாகி அதற்கான நியாயமான கட்டணமும் குறைவான லாபமும் வராமல் கடனாக வெளியில் நின்று விட்டால் அவர்கள் சந்திக்கும் நெருக்கடி வார்த்தைகளால் விவரிக்க இயலாது. வாடிக்கையாளர்கள் மீதும் ஆத்திரப்பட இயலாது.
பொருட்களை உற்பத்தி செய்து விற்பனைக்காக வழங்கும் தொழில் முனைவோர்களையும் பகைத்துக் கொள்ள இயலாது . இதனை ஆன்மீக முன்னோர்கள் உங்களுக்கான பண வரவு விடயத்தில் தடையும், தாமதமும் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறார்கள். அத்துடன் இதற்கான பிரத்யேக குறிப்பினையும் சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : பாதாம் பருப்பு, பசு நெய், பச்சை கற்பூரம் , தீப்பெட்டி, வெண்பட்டு துணி.
பண வரவு தொடர்புடையது என்பதால் மகாலட்சுமியை வழிபடுவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும். அதனால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை தருணங்களில் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டவுடன் அந்த குறிப்பிட்ட தருணத்தில் நீங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் வெண் பட்டு துணி அல்லது வெண்மை வண்ணத்திலான துணி இவற்றில் பன்னிரண்டு என்ற எண்ணிக்கையிலான பாதாம் பருப்பினை வைத்து அதை முடிச்சிட வேண்டும். இந்த முடிச்சினை உங்கள் வீட்டு நிலை வாசல் படிக்கு முன்னதாக கட்டி விட வேண்டும்.
அத்துடன் உங்களது பூஜை அறையில் மூன்று பாதாம் பருப்பினை எடுத்துக்கொண்டு, அதன் மீது சிறிதளவு பசு நெய்யையும், சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் வைத்து அதனை எரிக்க வேண்டும். பாதம் பருப்பு எரிந்து நிறைவடைந்த உடன் அதிலிருந்து கிளம்பும் சூட்சம ஆற்றல் கொண்ட புகையானது பண வரவிற்காக உள்ள தடையை அகற்றி, உங்களது பண வரவை எளிமைப்படுத்தும். இதனைத் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகளில் செய்தால் வராத பணமும் விரைவில் வரும். அதனால் மகிழ்ச்சியும், லாபமும் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM