(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்னும் சில மணித்தியாலங்களில் ஆரம்பமாகவுள்ளது.
புதன்கிழமை (02) ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, அணித் தலைவர் ஷுப்மான் கில் குவித்த ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன் பலமான நிலையை அடைந்துள்ளது.
போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆரம்ப வீரர் கே.எல். ராகுல் 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோதிலும் யஷஸ்வி ஜய்ஸ்வால், கருண் நாயர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியை நல்ல நிலையில் இட்டனர்.
யஷஸ்வி ஜய்ஸ்வால் 87 ஓட்டங்களையும் கருண் நாயர் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
முதலாவது டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அசத்திய ரிஷாப் பான்ட் 25 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.
அணிக்கு மீளழைக்கப்பட்ட நிட்டிஷ் குமார் ரெட்டி களம் புகுந்த சொற்ப நேரத்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். (211 - 5 விக்.)
ஷுப்மான் கில், சிரேஷ்ட வீரர் ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலமான நிலையில் இட்டுள்ளனர்.
ஷுப்மான் கில் 216 பந்துகளை எதிர்கொண்டு 12 பவண்டறிகள் உட்பட 114 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 5 பவுண்டறிகள் உட்பட 41 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
பந்துவீச்சில் கிறிஸ் வொக்ஸ் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM