கதிர்காமம் முருகன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி வழங்கும் “கதிரைவேற் பெருமானே! கருணைத் தேவே!” நாட்டிய நாடக நிகழ்வு, எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள புதிய கதிரேசன் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய நடன, இசைக் கலைஞர்கள் இணைந்து பங்கேற்கும் இந்த நாட்டிய நாடகம், அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் நிறுவுனரும் பரதநாட்டியக் கலைஞருமான திவ்யா சுஜேனின் தயாரிப்பு மற்றும் நெறியாள்கையில் உருவாக்கப்பட்டு மேடையேற்றப்படுகிறது.
“மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்” கொள்ளுப் பெயரன் ராஜ்குமார் பாரதி நாட்டிய நாடகத்துக்கான இசையாக்கத்தினை அமைத்துள்ளார்.
மேலும், ஸ்ரீ சாய் ஷ்ரவணம் கீபோர்ட், ஒலி வடிவமைப்பினை வழங்க, ஸ்ரீ ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீ R.P.ஷ்ரவன், ஸ்ரீமதி க்ருத்திகா அரவிந்த் ஆகியோர் வாய்ப்பாட்டு பாட, ஸ்ரீ கார்த்திகேயன் ராமநாதன் (மிருதங்கம்), ஸ்ரீ கணபதி வெங்கட சுப்ரமணியன் (தாள வாத்தியங்கள்), ஸ்ரீ எம்பார் கண்ணன் (வயலின்), ஸ்ரீ நவின் சந்தர் (புல்லாங்குழல்), ஸ்ரீ வி.வி.சுப்ரஹ்மண்ய சர்மா (வீணை, ஸ்வரமண்டல்), ஸ்ரீ கிஷோர் குமார் (சிதார்), ஸ்ரீ அடையார் D.பாலசுப்பிரமணி (நாதஸ்வரம்) ஆகியோர் இசைப் பங்களிப்பில் இந்நாட்டிய நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது.
இந்தியாவின் பரதநாட்டியம் மற்றும் “களரி” நடனக் கலைஞரான மிருதுளா ராய் மற்றும் அவரது “நாட்டிய நிகேதன் நடனப்பள்ளி” மாணவிகளும் இணைந்து இந்த நாட்டிய நாடகத்தில் பங்குபற்றுவதோடு மற்றுமொரு இந்திய பரதநாட்டியக் கலைஞரான வித்யா அரசும் நடனமாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM