bestweb

யாழ்ப்பாணத்தில் கொமர்ஷல் வங்கி முதலாவது பிரத்தியேக மகளிர் வங்கி கிளையை திறந்தது

Published By: Digital Desk 2

03 Jul, 2025 | 12:28 PM
image

கொமர்ஷல் வங்கி தனது முதல் பிரத்தியேக மகளிர் வங்கி நிலையமான அணகி மகளிர் வங்கியை யாழ்ப்பாணக் கிளையில் திறந்து வைத்துள்ளது. 

பெண்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கி, பெண்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கும் நோக்கில் செயல்படுகிறது.

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில், இலக்கம் 474 இல் அமைந்துள்ள அணகி மகளிர் வங்கி நிலையம், அர்ப்பணிப்புள்ள பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படுவதோடு, பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற சிறப்பு வசதிகளை வழங்குகிறது.

பெண் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அணகி மகளிர் வங்கி நிலையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, குழந்தைகள் விளையாடும் பகுதி, பிரத்தியேக அடகு பிரிவு, ஆலோசனை பிரிவு, சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும், எந்தவொரு கொமர்ஷல் வங்கி கிளையிலும் வழங்கப்படும் முழு அளவிலான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் வழங்குகிறது.

இந்த முயற்சியின் மூலம், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் பெண்களை வலுப்படுத்துவதற்குமான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக வங்கி தெரிவித்துள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right