bestweb

2025 CRIB CEO’s Forum and Institutional Rating Awards Ceremony ; மக்கள் வங்கிக்கு உயர் அங்கீகாரம்

03 Jul, 2025 | 11:56 AM
image

தரவு மகத்துவத்திற்காக மக்கள் வங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. CRIB CEO’s Forum and Institutional Rating Awards Ceremony 2025 நிகழ்வில் உச்ச அங்கீகாரங்களைப் பெற்றுள்ள மக்கள் வங்கி, தொழிற்துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தால் (Credit Information Bureau of Sri Lanka - CRIB) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதிப்பு மிக்க நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுனர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளதுடன், மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் திரு. ஜே.பீ.ஆர். கருணாரட்ன, CRIB பணிப்பாளர் சபைத் தலைவர் உள்ளிட்ட மதிப்பிற்குரிய பிரமுகர்கள் பலரும் சமூகமளித்திருந்தனர். 

புள்ளிவிபர தரம் மற்றும் திறன் ஆகியவற்றில் மிகச் சிறந்த பங்களிப்பிற்காக மக்கள் வங்கிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், பணியகத்தால் வழங்கப்பட்ட இரு மிக முக்கியமான பெறுபேற்றுத்திறன் பிரிவுகளில் இரு விருதுகளை அது தனதாக்கியுள்ளது:

புதுப்பிக்கப்பட்ட விபரங்களைப் பேணுதல் (Maintenance of Updated Information)

அதியுயர் செல்லுபடி நிலையைப் பேணுதல் (Maintenance of Highest Validity)

புள்ளி விபர ஒருமைப்பாடு, தொழிற்பாட்;டு மகத்துவம், மற்றும் தகவல் முகாமைத்துவத்தில் மிகச் சிறந்த நடைமுறைகளுக்கு உட்படுதல் ஆகியவற்றில் வங்கியின் இடைவிடாத அர்ப்பணிப்பை இவ்விருதுகள் அடிக்கோடிட்;டுக் காட்டுகின்றன.

CRIB ன் மத்திய வைப்பகத்திற்கு சுமார் 4 மில்லியன் பரிவர்த்தனைகளை மக்கள் வங்கி பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்பதுடன், இது மொத்த அளவில் கிட்டத்தட்ட 20மூ பங்கினை பிரதிநிதித்துவம் செய்கின்றது. அந்த வகையில், தேசிய கடன் உட்கட்டமைப்பிற்கு முன்னணி பங்களிப்பாளர் என்பதில் தனது அளவையும், பொறுப்பினையும் சுட்டிக்காட்டியுள்ளது.    

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி - மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (இணக்கப்பாடு), திருமதி சமந்தி சேனாநாயக்க அவர்கள் விருதொன்றைப் பெற்றுக்கொள்வதுடன், பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா அவர்களும் அருகில் காணப்படுகின்றார். 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right