செம்மணி புதைகுழியில் 30 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்வு ; அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் அகழ்வுகள் இன்று ஆரம்பம்

Published By: Digital Desk 2

03 Jul, 2025 | 10:19 AM
image

யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்புகள் மற்றும் மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் வியாழக்கிழமை  (03) அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஏழாம் நாள் நடவடிக்கைகள் புதன்கிழமை (02) நடைபெற்றது. 

அன்றைய பணிகளில், நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. மேலும் சுமார் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் குழப்பமான முறையில் காணப்பட்டதால், அவற்றை அகழ்ந்து எடுக்க பணியாளர்கள் சவால்களை சந்தித்துள்ளனர்.

மேலும், நேற்றைய அகழ்வு பணிகளில் மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை சிறுவர்களுடைய எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தமாக 30 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்கேற்புடன் சந்தேகத்திற்குரிய பிரதேசங்களில் அகழ்வு பணிகள் புதன்கிழமை ( 02) ஆரம்பிக்கப்பட்டது. அதே நேரத்தில், சந்தேகமான பகுதிகளில் அகழ்வு பணிகளுக்கு முன்னதாக துப்பரவு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04