திடீர் விபத்துக்களால் உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published By: Digital Desk 2

03 Jul, 2025 | 10:23 AM
image

திடீர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்திய நிபுணர் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் ருவந்தி பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டிலுள்ள தரவுகளை ஆய்வு செய்யும்போது, திடீர் விபத்துகளால் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

பெரும்பாலான விபத்துகள் அறியாமை மற்றும் சோதனை செய்யும் முயற்சிகளினால் ஏற்படுகின்றன.

இந்த திடீர் விபத்துகள் பல வடிவங்களில் இடம்பெறுகின்றன.

2 முதல் 3 வயதுக்கிடையிலான சிறுவர்கள் அறியாமையால் ஏற்படும் விபத்துக்குள்ளாகுகின்றனர்.

12 முதல் 14 வயதுக்கிடையிலான சிறுவர்கள் பல்வேறு சோதனை முயற்சிகளால் விபத்துக்குள்ளாகுகின்றனர்.

கீழே தவறி விழுதல், சுளுக்கு மற்றும் தீக்காயங்கள் ஏற்படல் ஆகியவை சிறுவர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் விபத்துகளாகும்.

விபத்துகளை தடுப்பதற்காக சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் பேராசிரியர் ருவந்தி பெரேரா வலியுறுத்தினார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும்...

2025-12-07 09:22:27
news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 08:31:11
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24