bestweb

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த 'மார்கன்' படக்குழு

02 Jul, 2025 | 06:02 PM
image

இயக்குநர் லியோ ஜோன் பால் இயக்கத்தில் விஜய் அண்டனி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான 'மார்கன்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக பட மாளிகையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மார்கன் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பிரத்யேக நிகழ்வினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர்.‌இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஐசரி கே. கணேஷ், தனஞ்ஜெயன், ரமேஷ் பிள்ளை ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

விஜய் அண்டனி பேசுகையில், '' நான் தமிழ் திரையுலகில் வெற்றிகளையும் சந்தித்து விட்டேன். தோல்விகளையும் சந்தித்து விட்டேன். இந்த படத்தின் வெற்றி எனக்கு முக்கியமானது. இந்த படத்தில் இயக்குநர் லியோ ஜோன் பாலையும், என் தங்கையின் மகன் அஜய் திஷானையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

எந்த திரைப்படமும் ஹீரோவால் ஓடுவதில்லை. கடவுளே வந்து ஹீரோவாக நடித்தாலும் இயக்குநருடைய எழுத்தும், இயக்கமும் திறம்பட இல்லை என்றால் படம் தோல்விதான் அடையும். அதே தருணத்தில் இயக்குநரின் எழுத்தும் இயக்கமும் அழுத்தமாக இருந்தால்.. குரங்கு ஹீரோவாக நடித்தாலும் கூட அந்த படம் வெற்றி பெறும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right